உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்புகழை பாடப்பாட பரவசம்

திருப்புகழை பாடப்பாட பரவசம்

சிவாஜி நகர்: 'தமிழ் மொழியில் நிறைய அதிர்வுகள் உள்ளன. விழாவில் பாடுவதை கேட்க வேண்டும். தமிழ் மொழி புரியவில்லை என்றாலும், திருப்புகழ் கேட்டாலோ, பாடினாலோ அந்த அதிர்வுகள் பல நன்மைகளை அளிக்கும்,'' என, சிவாஜி நகர் திம்மையா சாலையில் உள்ள, காசி விஸ்வநாதேஸ்வரர் சுவாமி கோவில் ராஜ பாலசந்திர சிவாச்சாரியார் தெரிவித்தார்.திருப்புகழ் ஸ்ரீசுப்ரமணிய சுவாமியின் திருவருளால் அருணகிரி நாதரால் பாடப்பட்டது. ஓம் என்ற பிரணவத்தின் உட்பொருளை சிவனுக்கே உபதேசம் செய்தமையாலும், ஆறுமுகத்தை பெற்றிருப்பதாலும், சிவனைவிட உயர்ந்தவர் ஸ்ரீமுருகப் பெருமான்.

நம்பிக்கை

அவர் அருளை எளிதில் பெற திருப்புகழ் பாராயணம் செய்வர். இவ்வாறு செய்தால் திருமணத்தடை, நோய் தீர்த்து நல்வாழ்வை தருவது, குழந்தைப்பேறு அருளவல்லது, பகை நீக்குவது என, வேண்டிய எல்லா பேறுகளையும் அளிக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.இத்தகைய பேறு பெற்ற திருப்புகழ் பாராயணம் நிகழ்ச்சி, சிவாஜி நகர் திம்மையா சாலையில் காசி விஸ்வநாதேஸ்வரர் சுவாமி கோவிலில், மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை அன்று நடக்கிறது.நேற்று பெங்களூரு திருமுருகன் திருப்புகழ் பாராயணம் குழுவினரால், திருப்புகழ் பாராயணம் செய்யப்பட்டது. நான்கு மணி நேரத்துக்கும் மேலாக பாராயணம் நடந்தது.

ஈர்ப்பு சக்தி

பூஜையின் போது, கோவில் தலைமை அர்ச்சகர் ராஜ பாலசந்திர சிவாச்சாரியார் ஆற்றிய உரை:தியாகராஜ கீர்த்தனைகள் அனைத்தும் தெலுங்கில் உள்ளன. அதை தெலுங்கில் பாடினால் ரசித்து கேட்கிறோம். ஆனாலும் இயல், இசை மட்டுமே செவிக்கு விருந்து; நாடகம் என்பது கண்களுக்கு விருந்தளிப்பதாகும்.எந்த மொழியாக இருந்தாலும், அந்த மொழிக்கு ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கும். சிறு குழந்தைக்கு பாடல் போட்டுக் காண்பித்தால், அக்குழந்தைகள் கைத்தட்டி மகிழும். எப்படி மகிழ்கிறது; அந்த மொழியின் அதிர்வு குழந்தைக்கு செல்கிறது.தமிழ் மொழியில் நிறைய அதிர்வுகள் உள்ளது. விழாவில் பாடுவதை கேட்க வேண்டும். இந்த வேளையில், சிலர் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதை தவிர்க்க வேண்டும். தமிழ் மொழி புரியவில்லை என்றாலும், திருப்புகழ் கேட்டால், அந்த அதிர்வு பல நன்மையை அளிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.பின், திருப்புகழ் பாராயணம் பாடுவதற்காக, நகரின் பல பகுதிகளில் இருந்து பெண்கள் வந்திருந்தனர். அவர்கள் ராகத்துடன் பாடியதை கேட்கும்போது மெய் சிலிர்த்தது. பாராயணத்தின் இடையே, பக்தைகள் கும்மி நடனம் ஆடினர். இதை பலரும் பாராட்டினர்.� திருப்புகழ் பாராயண நிறைவில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. � திருப்புகழ் பாடியவர்கள், �கும்மி நடனமாடிய குழுவினர். இடம்: காசி விஸ்வநாதேஸ்வரர் சுவாமி கோவில், திம்மையா சாலை, பெங்களூரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி