உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இது உங்கள் இடம்: வைகோவின் பொறுமை ஆச்சரியமானது!

இது உங்கள் இடம்: வைகோவின் பொறுமை ஆச்சரியமானது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உலக, தேசிய, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்

என்.வைகைவளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'செத்தாலும் சொந்த சின்னமான பம்பரத்தில் தான் போட்டியிடுவேன்' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் துரை வைகோ சொன்னதால், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு கோபம் தலை உச்சிக்கு சென்றது.உடனே வைகோவைத் தொடர்பு கொண்டு, 'உங்கள் மகனுக்கு, எதை, எங்கே, எப்படி பேச வேண்டும் என்ற பக்குவம் கொஞ்சமும் இல்லை. ம.தி.மு.க., வை கூட்டணியில் சேர்ப்பதற்கு, தி.மு.க.,வினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.'அதையும் மீறித்தான், நீங்கள் கேட்டுக் கொண்டபடி திருச்சி தொகுதியைக் கொடுத்தேன்' என, காய்ச்சி எடுத்திருக்கிறார் ஸ்டாலின்.கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இரண்டு தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் என, தாராளமாக வழங்கிய ஸ்டாலின், ம.தி.மு.க.,வுக்கு மட்டும், ஒரே ஒரு தொகுதியைக் கொடுத்ததை எந்த விதத்திலும் நியாயபடுத்த முடியாது.கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் அவர்களது சொந்த சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்த ஸ்டாலின், ம.தி.மு.க., மட்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கண்டிஷன் போட்டது, துரைக்கு மன உளைச்சலைத் தந்துவிட்டது.கருணாநிதி காலத்திலேயே, வைகோ பல சந்தர்ப்பங்களில் பல இடங்களில், கருணாநிதியால் அவமானப்படுத்தப்பட்ட சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன.அதை எல்லாம் மறந்து தான், வைகோ, தி.மு.க.,வுடன் இணைந்து பணியாற்ற முடிவு எடுத்தார்.அப்படிப்பட்டவரின் மகனுக்கு இப்படி ஒரு அவமானம் தேவையா?தனக்கும், தன் மகனுக்கும், இவ்வளவு அவமானம் நடந்த பிறகும் கூட, வைகோ பொறுமை காட்டுவது நமக்கு ஆச்சரியம் அளிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

KR
மார் 29, 2024 16:04

Because MDMK did not get second constituency one sitting MP had to take an extreme step.


பேசும் தமிழன்
மார் 29, 2024 13:11

பெட்டி கோபாலு .....ஏதோ பெரிய அளவிலான திட்டத்துடன் இருக்கிறார் போல் தெரிகிறது....எதிர்காலத்தில் திமுக கட்சியை கைப்பற்ற ஏதாவது திட்டம் இருக்கலாம் !!!


ஆரூர் ரங்
மார் 29, 2024 12:35

தோலின் தடிமன் அதிகம் போலிருக்கிறது


Palanisamy Sekar
மார் 29, 2024 06:28

எவ்வளவு கீழ்த்தரமாக பேசினாலும் கோவாலு இப்போதெல்லாம் துடைத்து எறிந்துவிட்டு போயிட்டே இருப்பார் கட்சியின் சொத்து மதிப்பு பல நூறு கோடிகள் என்கிறார்கள் அவ்வளவு சொத்தையும் தனது மகனை அனுபவிக்க விடுவாரா அல்லது கணேசமூர்த்தி போல ஆட்கள் வசம் ஒப்படைப்பாரா என்ன? வைகோவின் அரசியல் வியாபாரத்தில் வெ மா சூ சொ எல்லாம் எதிர்பார்க்க முடியாது


மேலும் செய்திகள்