| ADDED : ஏப் 17, 2024 05:31 AM
ஹூப்பள்ளி, : காரும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், மூவர் உயிரிழந்தனர்.ஹூப்பள்ளி புறநகரின், அஞ்சடகேரி அருகில் நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்த காரும், தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் கார் அப்பளமாக நொறுங்கியது.இதில் பயணித்த ஹைதராபாதின், காவடிகுடா கிராமத்தை சேர்ந்த முர்கிலா பாலராஜுகவுடா, 45, தெலுங்கானா பிட்டம்பள்ளியில் வசித்தநவீன், 26, ஆந்திராவின், பாஹுதொட்டியை சேர்ந்த பிரதீப், 35, உயிரிழந்தனர்.இவர்கள் ஹூப்பள்ளி வழியாக கார்வாருக்கு செல்லும் போது, விபத்து நடந்துள்ளது. விபத்தில் காரில் இருந்த ஒருவர், பஸ்சில் பயணித்த இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.ஹூப்பள்ளி ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.