| ADDED : மே 03, 2024 10:23 PM
மூணாறு,:கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் அருகே செண்பகதொழுகுடி பகுதியில் டூவீலர் விபத்தில் தாய், நான்கு வயது மகள் உட்பட மூன்று பேர் பலியாயினர்.சின்னக்கானல் திடீர் நகரைச் சேர்ந்த மணிகண்டன், சகோதரர் செல்வம் ஆகியோர் எர்ணாகுளத்தில் குடும்பத்தினருடன் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இரு தினங்களுக்கு முன் குடும்பத்துடன் திடீர் நகர் வந்தனர். இந்நிலையில் மணிகண்டன் மனைவி அஞ்சலி 27, மகள் அமேயா 4, செல்வம் மனைவி ஜென்சி 19, ஆகியோர் டூவீலரில் சூரியநல்லிக்கு சென்றனர். அஞ்சலி அதனை ஓட்டினார். அங்கிருந்து மாலை 4:30 மணிக்கு திரும்புகையில், செண்பகதொழுகுடி பகுதியில் இறக்கத்தில் வந்தபோது டூ-வீலர் கட்டுப்பாட்டை இழந்து, ரோட்டில் 25 அடி துாரம் இழுத்துச் சென்றது.இவ்விபத்தில் மூவரும் பலத்த காயம் அடைந்த நிலையில் அமேயா சம்பவ இடத்தில் இறந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அஞ்சலி, ஜென்சி இறந்தனர். சாந்தாம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.செல்வம் - ஜென்சி தம்பதிக்கு இரண்டு மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது.