| ADDED : ஜூன் 06, 2024 11:58 PM
சட்னா,மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டம் உம்ரி கிராமத்தில் கிணற்றில் பசு ஒன்று நேற்று முன்தினம் தவறி விழுந்தது. இதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த மூவர், கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி அதை மீட்க முயன்றனர்.அப்போது அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இது தொடர்பாக கிராம மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் உள்ளூர் மக்கள் சிலரின் முகத்தில் ஈரத்துணியை கட்டி, கிணற்றில் இறக்கினர். அவர்கள் மூச்சுத்திணறி கிணற்றுக்குள் தவித்த இருவரை காப்பாற்றி மேலே கொண்டு வந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த டாக்டர்கள், மயங்கி கிடந்த அசோக் சிங், 45, ராம்ரத்தன், 22, விஷ்ணு, 24, ஆகியோரை பரிசோதனை செய்தனர். இதில் மூவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இந்நிலையில், கிணற்றில் விழுந்த பசுவும் உயிரிழந்தது.