உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவாலை சந்திக்க மனைவி சுனிதாவுக்கு திகார் சிறை அனுமதி மறுப்பு

கெஜ்ரிவாலை சந்திக்க மனைவி சுனிதாவுக்கு திகார் சிறை அனுமதி மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கெஜ்ரிவாலை சந்தித்து பேசுவதற்கான அனுமதியை திகார் சிறை ரத்து செய்துள்ளது.மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள அவரை அவரது மனைவி சுனிதா அவ்வப்போது சந்தித்து வருகிறார். அது மட்டுமல்லாது அமைச்சர்கள் மாநில முதல்வர்கள் சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவி சுனிதாவுக்கு அளித்த அனுமதியை ரத்து செய்துள்ளது திகார்சிறை நிர்வாகம். இது பெரும் சரச்சையை உருவாக்கியது. இதனையடுத்து விளக்கம் அளித்துள்ள சிறை நிர்வாகம், சிறையின் விதிப்படி கைதிகள் வாரத்திற்கு இரு முறை மட்டுமே தங்களை சந்திக்க வருபவர்களிடம் பேசலாம். அதன் படி நாளை 29-ம்தேதி ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி, கெஜ்ரிவாலை சந்திக்கிறார். தொடர்ந்து 30-ம் தேதி பஞ்சாப் முதல்வரும் கெஜ்ரிவாலை சந்திக்கிறார். இதன் காரணமாக இந்த வாரத்தில் இரண்டு சந்திப்புகள் நிகழ உள்ள நிலையில் கெஜ்ரிவால் மனைவி சுனிதாவுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kasimani Baskaran
ஏப் 29, 2024 05:21

குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர் எப்படி முதல்வர் பதவியில் நீடித்து நிர்வாகம் செய்ய முடியும்? வேறு முதல்வரை தேர்வு செய்யவில்லை என்றால் ஆட்சியை கலைப்பதுதான் முறை


தாமரை மலர்கிறது
ஏப் 29, 2024 03:12

ஜெயிலிலிருந்து சட்டத்திற்கு விரோதமாக நடக்க கெஜ்ரி தனது மனைவியை வழிநடத்துகிறார் அதனால் அவர் மனைவி அவரை பார்ப்பதை தேர்தல் முடியும்வரை தடுப்பது நல்லது


ganapathy
ஏப் 29, 2024 00:15

நல்லது கிரிமினல்களின் அல்லங்கைகளும் கிரிமினல்களே


Ravi
ஏப் 28, 2024 23:19

மோடி வாழ்க


Ramesh Sargam
ஏப் 28, 2024 22:15

விவகாரம் ஆகவேண்டும் என்றுதான் கெஜ்ரியின் மனைவி, கெஜ்ரியை சந்திக்க விரும்புகிறார்


N. Ramachandran
ஏப் 28, 2024 22:01

வாவ் சூப்பர் ?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை