உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகாலை 1:00 மணி வரை சரக்கு கர்நாடக காங்., அரசு தாராளம்

அதிகாலை 1:00 மணி வரை சரக்கு கர்நாடக காங்., அரசு தாராளம்

பெங்களூரு, பெங்களூரில் உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் மற்றும் வர்த்தக கடைகள் அதிகாலை 1:00 மணி வரை திறந்திருக்க மாநில காங்., அரசு அனுமதி அளித்துள்ளது.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. பெங்களூரு நகருக்குள் மதுக்கூடங்கள் மற்றும் உணவகங்கள் இரவு 11:30 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.முதல்வர் சித்தராமையா, போலீஸ் துறை அதிகாரிகளை சந்தித்த நகர ஹோட்டல்கள் உரிமையாளர்கள் சங்கத்தினர், நாள் முழுதும் ஹோட்டல்கள் திறந்திருக்க அனுமதி கேட்டனர். ஆனால், அனுமதி அளிக்கவில்லை.இந்நிலையில், கர்நாடக அரசு 2024 - 25 பட்ஜெட்டில், 'மாநிலத்தின் 10 நகரங்களில் இரவு நேர வர்த்தகம் அதிகாலை 1:00 மணி வரை நீட்டிக்கப்படும்' என்று அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக, நகர்ப்புற வளர்ச்சி துறை புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளது.அதில், 'பெங்களூரில் மதுக்கூடங்கள், உணவகம், ஹோட்டல்கள் மற்றும் அனைத்து கடைகளும் இனி அதிகாலை 1:00 மணி வரை திறந்திருக்கும். இனி அனைத்து வர்த்தக கடைகளும் காலை 6:00 மணி முதல் மறுநாள் அதிகாலை 1:00 மணி வரை திறக்கலாம்' என குறிப்பிட்டுள்ளது.நகர ஹோட்டல்கள் உரிமையாளர் சங்க தலைவர் ராவ் கூறுகையில், ''பட்ஜெட்டில் அறிவித்தபடி, பெங்களூரு மாநகராட்சியில், வர்த்தக கடைகளுக்கு விதிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. ''வரும் நாட்களில், மற்ற மாநகராட்சிகளிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என நம்புகிறோம். இதன் வாயிலாக அதிக வேலை வாய்ப்புகள் உருவாகி, அரசுக்கு வருவாய் பெருகும்,'' என்றார்.மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல் மதுக்கூடங்கள், கிளப் உரிமம் வைத்துள்ளவர்கள் காலை 10:00 மணி முதல் மறுநாள் அதிகாலை 1:00 மணி வரையிலும் திறந்திருக்கலாம்.ஐ.டி., நிறுவனங்கள் நிறைந்த பெங்களூரில் இரவு பணி முடிந்து திரும்பும் இளைஞர்களுக்கு இந்த அனுமதி, உற்சாகத்தை தந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை