உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹைதராபாதில் டைம்ஸ் சதுக்கம் தெலுங்கானா அரசு அசத்தல்

ஹைதராபாதில் டைம்ஸ் சதுக்கம் தெலுங்கானா அரசு அசத்தல்

ஹைதராபாத்: தெலுங்கானாவின் ஹைதராபாதில், 'டைம்ஸ் சதுக்கம்' அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில தலைநகர் ஹைதராபாத், தகவல் தொழில்நுட்ப நகரமாகும். இங்கு ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில், டைம்ஸ் சதுக்கம் உள்ளது. இங்கு வணிக நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. சுற்றுலா பயணியரால் அதிகம் விரும்பப்படும் இடமாக இந்த சதுக்கம் உள்ளது. மேலும், பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் டைம்ஸ் சதுக்கத்தில் நடப்பது வழக்கம். இந்நிலையில், நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கம் போல், ஹைதராபாதிலும் அமைக்க தெலுங்கானா அரசு முடிவு செய்துஉள்ளது. மேலும் இதற்கான டெண்டரையும் அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ