உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழக சுற்றுலா பகுதிகளில் இ பாஸ் முறை மூணாறுக்கு படையெடுக்கும் பயணிகள்

தமிழக சுற்றுலா பகுதிகளில் இ பாஸ் முறை மூணாறுக்கு படையெடுக்கும் பயணிகள்

மூணாறு:தமிழக சுற்றுலா பகுதிகளில் இ -பாஸ் முறை அமல்படுத்தப்பட்டதால், மூணாறுக்கு பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி ஆகிய சுற்றுலா பகுதிகளுக்கு மே 7 முதல் இ- பாஸ் முறையை அரசு அமல்படுத்தியது. அதனால் அங்கு செல்ல இயலாத தமிழக சுற்றுலா பயணிகள் கேரளாவில் முக்கிய சுற்றுலா பகுதியான மூணாறுக்கு படையெடுத்து வருகின்றனர். மூணாறில் நகர் உட்பட சுற்றுலா பகுதிகள் அனைத்திலும் பயணிகளின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டது.குறிப்பாக மாட்டுபட்டி, எக்கோ பாய்ன்ட் உள்பட பல பகுதிகளில் வாகனங்கள் கடந்து செல்ல ஒரு மணி நேரம் முதல் இரண்டரை மணி நேரம் வரை காத்திருக்க நேரிட்டது. தவிர கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிவாசல் எஸ்டேட் பகுதியிலும், மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் பெரியவாரை, கன்னிமலை ஆகிய எஸ்டேட் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டு வாகனங்கள் 2 கி.மீ., துாரம் அணி வகுத்து நின்றன.போக்குவரத்து நெரிசலால் சுற்றுலா பயணிகள் மட்டும் இன்றி உள்ளூர் மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் மூணாறுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ - பாஸ் முறையை கேரள அரசு செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ