மேலும் செய்திகள்
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
58 minutes ago
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
1 hour(s) ago
பதேகர் சாஹிப் : பஞ்சாபில் தடம் மாறிச் சென்ற சரக்கு ரயில், மற்றொரு சரக்கு ரயிலின் பின்னால் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், சரக்கு ரயில் இன்ஜின் டிரைவர்கள் இருவர் படுகாயம்அடைந்தனர்.பஞ்சாப் மாநிலம் சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே, நேற்று அதிகாலை நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அருகில் உள்ள தண்டவாளத்தில், அம்பாலாவிலிருந்து ஜம்மு தாவிக்கு செல்லும் கோடைக்கால சிறப்பு பயணியர் ரயில் நின்றிருந்தது.இந்நிலையில், அதிகாலை 3:45 மணிக்கு அந்த வழியாக வந்த மற்றொரு சரக்கு ரயில், நிலக்கரி ரயிலின் பின்னால் மோதி தடம் புரண்டது. தடம் புரண்ட பெட்டிகள் பயணியர் ரயில் மீதும் உரசியது. இதனால், அதில் இருந்த பயணியர் பீதியில் அலறினர். இந்த விபத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை; சரக்கு ரயிலின் இன்ஜின் டிரைவர்கள் இரண்டு பேர் படுகாயம்அடைந்தனர். அவர்களை உடனடியாக ஆம்புலன்சில் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தால், அம்பாலா -- லுாதியானா பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக செல்ல வேண்டிய ரயில்கள், ராஜ்புரா, பாட்டியாலா, துரி மற்றும் சண்டிகர் வழியாக திருப்பி விடப்பட்டன. விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
58 minutes ago
1 hour(s) ago