உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புரி கோவில் பொக்கிஷ அறை பொருட்கள் இடமாற்றம்

புரி கோவில் பொக்கிஷ அறை பொருட்கள் இடமாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புரி : புரி ஜெகன்னாதர் கோவிலின் பொக்கிஷ அறையின் உட்புற அறை திறக்கப்பட்டு, அதில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை இடமாற்றம் செய்யும் பணி நடந்தது.ஒடிசாவின் புரி ஜெகன்னாதர் கோவிலின் பொக்கிஷ அறையில் உள்ள விலையுயர்ந்த பொருட்களை கணக்கிடும் மற்றும் அறைகளை புனரமைக்கும் பணி துவங்கியுள்ளது. இதன்படி, 46 ஆண்டுகளுக்குப் பின், கோவிலின் பொக்கிஷ அறை கடந்த 14ம் தேதி திறக்கப்பட்டது.கோவிலின் அடிப்பகுதியில் உள்ள இந்த பொக்கிஷ அறை இரண்டு பிரிவுகளை கொண்டது. கடந்த 14ம் தேதி, வெளிப்புற அறை திறக்கப்பட்டது. அதில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள் பாதுகாப்பு பெட்டிகளில் வைக்கப்பட்டு, தற்காலிக பாதுகாப்பு அறைகளுக்கு மாற்றப்பட்டன.இதைத் தொடர்ந்து, உட்புற அறையை திறக்கும் பணி நடந்தது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவரான ஒடிசா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிஸ்வநாத் ரத் உள்ளிட்டோர் நேற்று கோவிலுக்கு வந்தனர். கோவிலில் வழிபட்ட பின், உட்புற அறை திறக்கப்பட்டது. அதில் இருந்த பொருட்கள் பாதுகாப்பு பெட்டிகளில் வைக்கப்பட்டு, பாதுகாப்பு அறைக்கு மாற்றப்பட்டன.முன்னெச்சரிக்கையாக பாம்பு பிடிப்போர், சிறப்பு அதிரடிப் படையினர், தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். நீதிமன்ற உத்தரவின்படி நடக்கும் இந்தப் பணிகள் அனைத்தும் வீடியோவாக படம் பிடிக்கப்பட்டது. மேலும், பொக்கிஷ அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

venugopal s
ஜூலை 19, 2024 18:27

சாவியை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள், அப்புறம் தமிழன் ஒருவர் திருடி தமிழ்நாட்டுக்கு கொண்டு போய் விட்டதாக அடுத்த பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் குற்றம் சுமத்த வேண்டாம்!


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 19, 2024 10:28

கோவிலை தமிழக இந்து அறநிலைய துறையிடம் ஒப்படைத்தால் "நன்றாக" "மிக நன்றாக" பார்த்து கொள்வார்கள்.


Kasimani Baskaran
ஜூலை 19, 2024 05:48

அவனுக்கே கணக்குப்பார்க்க செல்ல இவர்களுக்கு ஓவரான தைரியம் வேண்டும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை