உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹெல்மெட் அணியவில்லையாம் லாரி ஓட்டுனருக்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் குளறுபடி

ஹெல்மெட் அணியவில்லையாம் லாரி ஓட்டுனருக்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் குளறுபடி

உத்தரகன்னடா: டிப்பர் லாரி ஓட்டுனருக்கு ஹெல்மெட் அணியவில்லை என்று அபராதம் விதித்து, போக்குவரத்து போலீசார் குளறுபடி செய்துள்ளனர்.உத்தரகன்னடா, ஹொன்னாவரா போக்குவரத்து போலீசார், அள்ளங்கி என்ற இடத்தில் நேற்று முன் தினம் மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக மணல் நிரப்பி வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தினர். 500 ரூபாய் அபராதம் விதித்து, ரசீது கொடுத்தனர். ரசீதை கண்ட ஓட்டுனர் சந்திரகாந்த் அதிர்ச்சி அடைந்தார். ஏனென்றால், ரசீதில் அவர் ஹெல்மெட் அணியவில்லை என்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சந்திரகாந்த், ''சார், நான் பைக் ஓட்டவில்லை. டிப்பர் லாரி ஓட்டுகிறேன்,'' என கூறினார்.குளறுபடி ஆனதை உணர்ந்த போலீசார், ஓட்டுனர் சீருடை அணியவில்லை என்பதால், அபராதம் விதித்ததாக கூறினர். அபராதம் வசூலித்துக் கொண்டு, லாரி ஓட்டுனரை அனுப்பினர். 'ஹெல்மெட் அணியவில்லை' என, லாரி ஓட்டுனருக்கு போலீசார் அளித்த அபராத ரசீது, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 'ஹொன்னாவரா போக்குவரத்து போலீசார், புதிதாக டிப்பர் ஓட்டுனர்கள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கியதாக தோன்றுகிறது. இனி ஹொன்னாவராவில், லாரி ஓட்டுனர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லையென்றால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்' என, நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை