உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செய்திகளின் மீதான நம்பிக்கை இந்தியாவில் அதிகரித்துள்ளது

செய்திகளின் மீதான நம்பிக்கை இந்தியாவில் அதிகரித்துள்ளது

சென்னை : இந்தியாவில், செய்திகளின் மீதான மக்களின் நம்பிக்கை, நடப்பாண்டில் அதிகரித்துள்ளது. சென்னையில் உள்ள 'ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம்' கல்லூரியும், பிரிட்டனைச் சேர்ந்த 'ராய்ட்டர்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் ஜர்னலிசம்' அமைப்பும் இணைந்து, 2024ம் ஆண்டுக்கான 'டிஜிட்டல் நியூஸ் ரிப்போர்ட்' அறிக்கையை வெளியிட்டுள்ளன. மொத்தம் 47 நாடுகளில் உள்ள மக்களின் செய்திகள் குறித்த ஆர்வம் மற்றும் செய்தி நிறுவனங்கள், தளங்களின் பங்களிப்பு குறித்து, இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: * இந்தியாவில், செய்திகளின் மீதான மக்களின் நம்பிக்கை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் மூன்று சதவீதம் அதிகரித்து, 41 சதவீதமாக உள்ளது. இதனால் 47 நாடுகளில், இந்தியா 18வது இடத்திற்கு முன்னேறியுள்ளது

* உலகளவில் செய்திகளின் மீதான அதிக நம்பிக்கை கொண்ட நாடாக பின்லாந்து விளங்குகிறது. கிரீஸ் மற்றும் ஹங்கேரி குறைந்த நம்பிக்கை கொண்ட நாடுகளாக உள்ளன * கடந்த 2023ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு இந்தியாவில் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களின் வாயிலான செய்தி நுகர்வு, மூன்று சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது * ஆன்லைன் வாயிலாக செய்திகளை பகிரும் நபர்களின் பங்கு, 45 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், இது இரண்டு சதவீத புள்ளிகள் குறைவாகும் * நாளிதழ்கள் மற்றும் அகில இந்திய வானொலி போன்ற பொது ஊடகங்கள், தொடர்ந்து அதிக அளவிலான நம்பிக்கையை பெற்று வருகின்றன * செய்திகளை அணுகுவதற்கு பயன்படுத்தப்படும் சமூக ஊடகங்களில், தொடர்ந்து 'யு டியூப்' முதலிடம் வகிக்கிறது. இதற்கு அடுத்த இடங்களில் 'வாட்ஸாப், பேஸ்புக்' உள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த கணக்கெடுப்பில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் ஆங்கிலம் பேசுபவர்கள் என்றும் நகர்ப்புறங்களில் உள்ள படித்த இளைஞர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் மிகப்பெரிய ஊடக சந்தையில், கணக்கெடுப்பில் பங்கேற்றவர்கள் சிறிய பங்கை மட்டுமே வெளிப்படுத்து வதால், இந்த முடிவு களை ஒட்டுமொத்த நாட்டின் பிரதிபலிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sampath Kumar
ஜூன் 18, 2024 09:10

இதுக்கு முன்பு இல்லை என்பதை ஒத்துக்கொண்டதற்கு நன்றி இனியும் இது தொடரும் என்பதில் ஐயம் இல்லை


sankaranarayanan
ஜூன் 18, 2024 05:45

அதிலும் தினமலரின் உண்மையான செய்திகளின் மீதான மக்களின் நம்பிக்கை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் பல சதவீதம் அதிகரித்திருக்கும் என்பதை சந்தேகமே இல்லை மீண்டும் தொடரட்டும்


Priyan Vadanad
ஜூன் 18, 2024 05:02

தினமலரின் தேர்தல் கருத்துக்கணிப்பு நினைவுக்கு வருகிறது.


Vadakkuppattu Ramanathan
ஜூன் 18, 2024 04:45

ஒரு தேசத்தின் அழிவு அந்நாட்டின் ஊடகங்கள் சொல்லும் பொய்களிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. நடுநிலையாக உள்ள ஊடகங்களின் எண்ணிக்கை மிக மிக குறைந்துள்ளது என்பதில் எந்த ஐயமும் இல்லை.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை