மேலும் செய்திகள்
பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து: 6 பேர் பலி
29 minutes ago
ஜோஹோ மெயிலுக்கு மாறினார் அமித் ஷா
29 minutes ago
முதல்வர் வேட்பாளர் நிதிஷ்!
43 minutes ago
நீதிபதியை தாக்க முயற்சி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
59 minutes ago
தாவணகெரே: எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் மேலாளரை கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். தாவணகெரே பி.பி., சாலையில் எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் அலுவலகம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், ஹரிஹரில் உள்ள வீட்டை 49.60 லட்சம் ரூபாய் கடன் கேட்டு, சிலர் ஆவணங்கள் சமர்ப்பித்திருந்தனர்.இந்த ஆவணங்களை பரிசீலித்த போது, பொய் என்பது தெரியவந்தது. இதனால், அவர்களுக்கு கடன் வழங்கப்படவில்லை. இதனால், சம்பந்தப்பட்ட நபர்கள், கோபம் அடைந்தனர்.நேற்று முன்தினம் மாலை, வீட்டுக்கு புறப்பட பைக்கில் ஏறிய பைனான்ஸ் மேலாளர் சரணை, நான்கு பேர் பிடித்து, வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றனர்.இது தொடர்பாக, ஹொன்னாலி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. கடத்தல் காரை, போலீசார் விரட்டி சென்று, ஹொன்னாலி வாடினகெரே என்ற இடத்தில் மடக்கி பிடித்தனர். இதில், ஷிகாரிபுராவை சேர்ந்த நாகராஜ், நசீர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான சாந்தன், விஸ்வநாத்தை தேடி வருகின்றனர்.காயமடைந்த மேலாளர் சரண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
29 minutes ago
29 minutes ago
43 minutes ago
59 minutes ago