உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நக்சலைட்டுகள் தாக்குதலில் இரண்டு போலீசார் வீரமரணம்

நக்சலைட்டுகள் தாக்குதலில் இரண்டு போலீசார் வீரமரணம்

பிஜப்பூர்: சத்தீஸ்கரில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில், சிறப்பு அதிரடிப்படை போலீசார் இருவர் வீர மரணம் அடைந்தனர்; நான்கு வீரர்கள் காயம் அடைந்தனர்.சத்தீஸ்கரில் உள்ள பிஜப்பூர், சுக்மா, தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள வனப்பகுதியில் சிறப்பு அதிரடிப்படை போலீசார், மத்திய ரிசர்வ் படை போலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர், நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு தேடுதல் வேட்டையை முடித்து திரும்பியபோது, தரேம் பகுதியில் நக்சல்கள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் சிக்கினர். இதில், சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் இருவர் இறந்தனர்; நான்கு வீரர்கள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த வீரர்கள் மீட்கப்பட்டு பிஜப்பூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

காஷ்மீரில் சண்டை

ஜம்மு - காஷ்மீரின் தோடா மாவட்டத்தின் வனப்பகுதியில், கடந்த 15ம் தேதி இரவு பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கேப்டன் பிரிஜேஷ் தாபா மற்றும் மூன்று வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை நடக்கிறது. இந்நிலையில், தோடா மாவட்டத்தின் கஷ்திகார் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த ராணுவ வீரர்களின் முகாம் மீது, நேற்று அதிகாலை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு நம் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். ஒரு மணிநேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில், இரு ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த வீரர் ஒருவரை, மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல் ஹெலிகாப்டர் வாயிலாக உதம்பூர் ராணுவ மருத்துவமனைக்கு விமானப்படை வீரர்கள் மீட்டு வந்தனர். இதற்கிடையே, குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை