வாய்பேச முடியா உயிரினங்கள் தவிப்பு
ஓக்லா:விலங்குகள், பறவைகளை பராமரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் ஓக்லாவில் இயங்கிவரும் சஞ்சய் காந்தி விலங்கு பராமரிப்பு மையம். நகர் முழுவதும் மீட்கப்படும் விலங்குகள், பறவைகள் இங்கே கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.கோடையால் பாதிக்கப்பட்டு கீழே விழும் பறவைகளும் இங்கே கொண்டு வரப்படுகின்றன. இந்த ஆண்டு கோடையால் வாய்பேச முடியாத உயிரினங்கள் கடும் தவிப்புக்குள்ளாகி இருப்பதாக இந்த மையத்தின் இணை இயக்குனர் நதீம் ஷெஹ்சாத் கூறினார்.அவர் கூறுகையில், “கடந்த ஆண்டு முழு கோடை காலத்தில் 1,222 பறவை, விலங்குகள் மீட்கப்பட்டன. இந்த ஆண்டில் இதுவரை 1,150 பறவைகள், விலங்குகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த விலங்குகளில் 80 முதல் 90 சதவீதம் நீரிழப்பால் பாதிக்கப்பட்டவை. இந்த கோடை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது,” என தெரிவித்தார்.3,500 விலங்குகள், 600 பறவைகள் இங்கே இருக்கின்றன. இந்த கோடை மிகவும் மோசமாக இருக்கிறது. எங்கள் கண்காணிப்பையும் மீறி தினமும் மூன்று முதல் நான்கு பறவைகள் இறக்கின்றன. தவிர, தினமும் கொண்டு வரப்படும் இரண்டு முதல் நான்கு நாய்கள் இறக்கும் கட்டத்தில் உள்ளன.அஜய் கைந்த்,மேலாளர்,சஞ்சய் காந்தி விலங்கு பராமரிப்பு மையம்