உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தடுப்பு சுவரில் செல்பி பாயிண்ட் ஆபத்தை உணராத சுற்றுலா பயணியர்

தடுப்பு சுவரில் செல்பி பாயிண்ட் ஆபத்தை உணராத சுற்றுலா பயணியர்

குடகு: மடிகேரியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர் அருகில், ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணியர் 'செல்பி' எடுத்து வருகின்றனர்.குடகு மாவட்டம், மடிகேரியில், 2018ல் பெய்த கன மழையில், நிலச்சரிவு ஏற்பட்டு, தேசிய நெடுஞ்சாலை அடித்துச் செல்லப்பட்டது.இதையடுத்து, மழை வெள்ளத்தில் சாலை அடித்துச் செல்லாமல் இருக்க, சாலை ஓரத்தில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது.சுற்றுலா வரும் பயணியர், இப்பகுதியில் உள்ள தடுப்புசுவரை 'செல்பி' பாயிண்டாக மாற்றிவிட்டனர். இந்த தடுப்புச்சுவரை ஒட்டி, 300 அடி பள்ளமும்; மறுபுறம் அழகிய மலைகளும் உள்ளன. இதன் அழகை ரசிக்க, ஆபத்தை உணராமல், தடுப்புச் சுவர், மீது நின்று செல்பி எடுத்து கொள்கின்றனர்.தடுப்புச் சுவர் ஓரத்தில் வேலி எதுவும் இல்லை. சற்று கவனக்குறைவாக இருந்தாலும், 300 அடி பள்ளத்தில் விழ வேண்டியது தான். 'இது சுற்றுலா தலம் இல்லை என்றாலும், பயணியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தடுப்புச் சுவர் கட்ட வேண்டும்.சுற்றுலா பயணியர் இங்கு செல்பி எடுப்பது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் பல முறை எச்சரித்து அனுப்பியும், யாரும் கேட்கபதில்லை. நிரந்தரமாக, இங்கு போலீசாரும் பாதுகாப்பில் இருப்பதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ