உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய பட்ஜெட்: பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

மத்திய பட்ஜெட்: பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வரும் ஜூலை 23ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முக்கிய அம்சங்கள் குறித்து பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.நடப்பு, 2024 - 2025ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் ஜூலை 22ம் தேதி துவங்கி, ஆகஸ்ட், 12ம் தேதி வரை நடக்க உள்ளதாக, மத்திய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்து உள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து, ஏழாவது முறையாக அவர் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.இந்நிலையில், இன்று (ஜூலை 11) பட்ஜெட்டில் இடம்பெற உள்ள, முக்கிய அம்சங்கள் குறித்து பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் உடனிருந்தார். தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பிரதமரான பின், தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

venugopal s
ஜூலை 11, 2024 22:57

இதையெல்லாம் பார்த்தால் பொருளாதார நிபுணர்கள் போல் தெரியவில்லை!


Barakat Ali
ஜூலை 11, 2024 20:07

ஒவ்வொரு பட்ஜெட் மூலமாகவும் தாளிக்கப்போறது அப்பாவி மக்களை ........ இதுக்கு ஆலோசனை, விவாதம், கருத்துக்கேட்பு, சிலரைத் திருப்திப்படுத்த பட்ஜெட் தகவலை கொஞ்சமாகக் கசிய விடல் என ஏகப்பட்ட முஸ்தீபுகள் ........


அப்புசாமி
ஜூலை 11, 2024 19:32

மக்களுக்கு உதவாத ஐடியாக்களை அள்ளிக்.குடுப்பாங்க. இவரும் அதுக்கேத்த மாதிரி பட்ஜெட் போட்டுருவாரு.


ஆரூர் ரங்
ஜூலை 11, 2024 18:36

பட்ஜெட் தயாரிப்பு ஒரு பெரிய கூட்டு முயற்சி. ஆனால் கல்லடிபடுவது ஒருவர் மட்டுமே.


ES
ஜூலை 11, 2024 16:40

100% True


Lion Drsekar
ஜூலை 11, 2024 16:33

பாராட்டுக்கள் அதே நேரத்தில் பொதுமக்களையும் கலந்தாலோசிக்கலாமே ? பள்ளிக்கே செல்லாதவர்கள் கல்வி அமைச்சர்களாகிறார்கள், அப்படி இருக்க ஆளுமை மிக்க , பொது அறிவு உள்ளவர்களையும் அழைத்து பேசலாம், அல்லது ஏதோ மக்களுடன் நேரடி தொடர்பு என்று கூறி ஒரு இணையதளத்தை உருவாக்கியது உண்மை என்றால் அதன்வழியாக மக்களின் ஆலோசனையும் பெறலாமே ? பொருளாதார வல்லுநர்கள் என்றால் அவர்கள் மக்கள் பிரநிதிகளுக்கு வருமானத்துக்கு அரசுக்கு வருமானம் ஈட்டுவதற்கு மட்டுமே வழி சொல்வார்கள், அப்படி இருக்க அந்த பணத்தை ஏழைகளின் வாழ்க்கைக்கு வீடு கட்டிக்கொடுக்க, மற்றும் கொடுக்கும் இலவசங்களுக்கு பயன்படுத்தலாமே . வந்தே மாதரம்


Rajarajan
ஜூலை 11, 2024 16:05

என்னத்த பெருசா இருக்க போகுது ?? அரசு ஊழியருக்கு கூடுதல் அகவிலைப்படி, அதுவும் முன்தேதியிட்டு. அடுத்த ஊதிய கமிஷன். அதுக்கு எப்படி எப்படி, வித விதமா பொதுமக்கள் மீது வரியை போடலாம்னு, பதினோரு பேரு கொண்ட குழுவை நியமிக்கறீங்க. அவ்ளோத்தானே ?? மத்தபடி, அதே நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை / அரசு துறை நிறுவனங்கள் மற்றும் செயல்பாடுகள். அதை தூக்கி நிறுத்தும் ஜனநாயக தூண்கள் என்ற ஏழை பாழைகள் / தனியார் நிறுவன ஊழியர்களின் உழைப்பின் வரி. இவ்வளவு தான் பட்ஜெட்டின் சரராம்சம். மத்தபடி, மீதி உள்ள பற்றாக்குறையை கடன் வாங்கி சமாளிப்பீங்க. நெல்லுக்கு பாயும் நீர், புல்லுக்கும் பாயும் கதையா, அரசு ஊழியருக்கு மிச்சம் போக, மீதி இருந்தா மற்ற துறைகளுக்கு எதோ கொஞ்சம் கொஞ்சம் தருவீங்க. அந்த ப்ராஜெக்ட் எல்லாம் முடிய பல தலை முறை ஆகிடும். விவசாயம் / தொழில்துறை / நீர்வளம் / கல்வி / சுகாதாரம் / ரயில்வே கட்டமைப்பு / கிராமப்புற சாலை வசதி / ஆற்றை கடக்க பாலம் போன்றவை எல்லாம், வெறும் நீண்ட கால கனவா இருக்கும். அடடே, ஒன்றை மறந்துட்டோமே. ஆளும் கட்சியை பொறுத்தவரை, இது நாட்டின் வளமான / ஏழை பாழைகளுக்கான ஆக்கபூர்வமான பட்ஜெட். எதிர்கட்சிகளை பொறுத்தவரை, இது ஏமாற்றமான பட்ஜெட். ஆகமொத்தம், இந்த ரெண்டு கட்சியுமே, நஷ்டத்தில் ஓடற அரசு துறை / பொதுத்துறை நிறுவனங்கள் வேண்டாம்னு சொல்லவே மாட்டாங்க. அதானே, MLA / MP / அமைச்சர்களும் இந்த கூட்டத்துல உட்பட்டவங்க தானே. ஒட்டுமொத்தமாக, நாட்டின் மொத்த மக்கள் தொகையில், சுமார் இரண்டு சதவிகித அரசு ஊழியற்க்கான பட்ஜெட் தான் இது. அவர்களுக்கு வாரி தர, ஏழைகள் / தனியார் ஊழியர்கள் நேரடி / மறைமுக வரி மற்றும் விலைவாசி உயர்வை எதிர்கொள்ள, மனதை திடப்படுத்திக்கொள்ள வேண்டும்.


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 11, 2024 17:35

இப்படி புலம்புவதை நிறுத்திவிட்டு, ஏதேனும் உருப்படியான யோசனை இருந்தால் சொல்லுங்கள்.


மேலும் செய்திகள்