உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி. சட்டசபைக்குள் புகுந்த மழைநீர்:

உ.பி. சட்டசபைக்குள் புகுந்த மழைநீர்:

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உ.பியில் பெய்து வரும் கனமழை காரணமாக தலைநகர் லக்னோவில் சட்டசபைக்குள் மழைநீர்புகுந்தது.உத்திரபிரதேச மாநிலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இந்நிலையில் உத்தர பிரதேச சட்டசபையில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்று (31.07.2024) தலைநகர் லக்னோ உள்ளிட்ட பெருநங்களில் 2 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.இதில் மாநில சட்டசபையான விதான் சபா கட்டிடத்திற்குள் மழைநீர் புகுந்தது. கட்டிடத்தின் நுழைவாயில், தாழ்வாரம் மற்றும் தரைத்தளத்தில் உள்ள சில அறைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. தேங்கி நின்ற மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.அதே சமயம் சட்டசபை அமர்வுகள் நடைபெறும் அமர்வுகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.சட்டசபைக்குள் மழைநீர் தேங்கியுள்ளதை சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு குறை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Mario
ஆக 01, 2024 08:50

உபி முன்பே எச்சரித்தோம்: மாநில அரசின் அலட்சியமே இதற்க்கு காரணம்


Ramesh Sargam
ஜூலை 31, 2024 21:18

இது என்னா பெரிய விஷயம்? தமிழக சட்டசபைக்குள் டாஸ்மாக் சரக்கே புகுவதாக பரவலாக செய்தி.


அப்பாவி
ஜூலை 31, 2024 20:43

அமித்ஷா போன வருஷமே உ.பி சட்டசபைக்குள் மழை பூந்துர்ம்னு பேரிடர் எச்சரிக்கை குடுத்தாச்சாம். யோகியார் கண்டு கொள்ளலையாம். அதனால் ரொம்ப கோவமா இருக்கிறாராம் அமித்ஷா.


தாமரை மலர்கிறது
ஜூலை 31, 2024 20:25

உபியில் கனமழை பொழிவதால், மத்திய அரசு அதிக பேரிடர் நிதியை உபி க்கு ஒதுக்கவேண்டும்.


கனோஜ் ஆங்ரே
ஜூலை 31, 2024 20:39

ஒரு,ஒரு லட்சம் கோடி பேரிடர் நிதி கொடுத்தா.... மொத்தமா அமுக்கிகிட்டு போயிடுவானுங்க...?


Narayanan Muthu
ஜூலை 31, 2024 21:19

எப்படா வாய்ப்பு வரும் மொத்தமா ஆட்டையை போடலாம்னு இருந்தானுங்க போல. ஊர் பணத்துல வாழும் உதவாக்கரைகள்.


Barakat Ali
ஜூலை 31, 2024 21:41

மொத்தமா அமுக்கிகிட்டு போயிடுவானுங்க...? அதனாலதான் டுமீலு நாட்டுக்கு கேட்டதைக் கொடுக்கல .....


மேலும் செய்திகள்









புதிய வீடியோ