உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வந்தே பாரத் பெண் லோகோ பைலட்: மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பு

வந்தே பாரத் பெண் லோகோ பைலட்: மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில், தெற்கு ரயில்வே வந்தே பாரத் ரயிலின் உதவி பெண், 'லோகோ பைலட்' பங்கேற்கிறார்.பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய அரசு நாளை பதவி ஏற்கிறது.இந்த விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள், வெளிநாட்டு தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்கள் மட்டுமின்றி சாதாரண குடிமகன்கள் சிலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அந்த வகையில், தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் மூத்த உதவி ரயில் ஓட்டுனராக பணிபுரியும் ஐஸ்வர்யா மேனன் என்பவருக்கு, பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர், 2 லட்சம் மணி நேரம் ரயில் ஓட்டுனராக பணியாற்றி உள்ளார்.குறிப்பாக, வந்தே பாரத், ஜன சதாப்தி ரயில்களில் ஓட்டுனராக பணியாற்றி உள்ளார். தற்போது, சென்னை சென்ட்ரல் - -விஜயவாடா மற்றும் சென்னை சென்ட்ரல் -- கோவை வந்தே பாரத் ரயில்களில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.அவர் தன் பணியில் காட்டும் சுறுசுறுப்பு மற்றும் ரயில்வே சிக்னலிங் பற்றிய ஆழமான அறிவிற்காக, மூத்த அதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளை பெற்றுஉள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

saravanan samy
ஜூன் 08, 2024 13:38

சகோதரிக்கு வாழ்த்துக்கள்


Lion Drsekar
ஜூன் 08, 2024 11:55

இந்த இரயில் ஓடுவதற்கு வெய்யில் மழை பாராமல் ஒரு ராணுவ வீரரைப்போல் , மனித சுழிக்கும் இயற்க்கை ஒருபுறம், மனித மிருகங்கள் தூக்கி எரியும் கழிவுகள் ஒருபுறம், இதன் நடுவில் இவர்கள் முகம் சுளிக்காமல் நடந்தே சென்று பணியாற்றுகிறார்கள் அவர்களில் ஒருவரை அழைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், வந்தே மாதரம்


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 08, 2024 09:24

நன்று ...... திராவிட மாடலாக இருந்தால் கௌரவிக்கப்படும் நபர்களே வேறு ....


Subramanian
ஜூன் 08, 2024 07:28

வாழ்த்துகள்


Senthoora
ஜூன் 08, 2024 11:13

யாருக்கு வாழ்த்து, பதவியில் பல அதிகாரங்களையும் இழந்து இன்று நிதிஸ், சந்திரபாபு ஆகியோரின் காலில் விழுந்து கிடத்தபதவி.


Kasimani Baskaran
ஜூன் 08, 2024 07:20

சாதாரண குடிமக்களும் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது சிறப்பு.


Renukadevi,Srirangam
ஜூன் 08, 2024 06:51

நல்ல லட்சணமான மூஞ்சிதான் ஆனா நெற்றியில் திலகம் இல்லாத பாழ் நெற்றி வேஸ்ட் ஃபெல்லோ


Subramanian
ஜூன் 08, 2024 07:28

உண்மை


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை