உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியலமைப்பை மீறுவதா? சபாநாயகருக்கு கவர்னர் கண்டனம்

அரசியலமைப்பை மீறுவதா? சபாநாயகருக்கு கவர்னர் கண்டனம்

கோல்கட்டா, மேற்கு வங்கத்தில் தன் உத்தரவை மீறி, புதிய எம்.எல்.ஏ.,க்களுக்கு சபாநாயகர் பிமன் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்ததற்கு, அம்மாநில கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, கவர்னர் ஆனந்த போசுக்கும், மாநில அரசுக்கும் இடையே துவக்கம் முதலே மோதல் போக்கு நிலவுகிறது.

போராட்டம்

சமீபத்தில், பராநகர், பக்வாங்கோலா ஆகிய தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், ஆளும் திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த சயந்திகா பானர்ஜி மற்றும் ரேயத் ஹொசைன் சர்கார், முறையே வெற்றி பெற்றனர். இவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி, மேற்கு வங்க சட்டசபை சபாநாயகர் பிமன் பானர்ஜி, கவர்னர் ஆனந்த போசை கேட்டுக் கொண்டார். இதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததை கண்டித்து, கடந்த வாரம் சட்டசபை வெளியே, சயந்திகா பானர்ஜி மற்றும் ரேயத் ஹொசைன் சர்கார் போராட்டம் நடத்தினர். இடைத்தேர்தலில் வென்ற சயந்திகா பானர்ஜி மற்றும் ரேயத் ஹொசைன் சர்காருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி, துணை சபாநாயகர் ஆஷிஷ் பானர்ஜிக்கு, கவர்னர் ஆனந்த போஸ் நேற்று உத்தரவிட்டார்.ஆனால், சட்டசபையில் நேற்று நடந்த சிறப்பு கூட்டத்தொடரில், சயந்திகா பானர்ஜி மற்றும் ரேயத் ஹொசைன் சர்காருக்கு, சபாநாயகர் பிமன் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.''சபாநாயகருக்கு முன்னுரிமை இருப்பதால், நான் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவில்லை,'' என, துணை சபாநாயகர் ஆஷிஷ் பானர்ஜி தெரிவித்தார்.இது குறித்து, சமூக வலைதளத்தில் கவர்னர் ஆனந்த போஸ் கூறியதாவது:எம்.எல்.ஏ.,க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி, துணை சபாநாயகர் ஆஷிஷ் பானர்ஜிக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், அரசியலமைப்பு சட்டத்தை மீறி, சபாநாயகர் பிமன் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். கவர்னரால் நியமிக்கப்படும் நபரே பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியும் என அரசியலமைப்பு கூறும் நிலையில், அதை மீறி, பிமன் பானர்ஜி செயல்பட்டுள்ளார். இது குறித்து, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அறிக்கை அனுப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

முரண்டு

இதற்கு பதிலளித்த சபாநாயகர் பிமன் பானர்ஜி கூறுகையில், ''நாங்கள் கவர்னரையும், அரசியலமைப்பையும் மதிக்கிறோம். சட்டசபைக்கு வந்து கவர்னர் தான் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும். ''ஆனால், அவர் எங்களை மதிக்காமல் முரண்டு பிடிக்கிறார். நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவரை போல் நியமனம் செய்யப்பட்டவர்கள் அல்ல,'' என்றார்.இதற்கிடையே, ''சட்ட சபையின் சிறப்பு கூட்டத் தொடர் குறித்து தனக்கு எதுவும் தெரியாது,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Mukesh Kumar
ஜூலை 07, 2024 19:32

அதெப்படி ப.ஜா.க ஆட்சியில் இல்லாத மாநிலத்தில் மட்டும் இப்படி....


venugopal s
ஜூலை 06, 2024 13:09

மேற்கு வங்க ஆளுநரின் செயல் "தானும் ஒன்றும் செய்ய மாட்டார் என்ற பழமொழியை ஞாபகப் படுத்துகிறது!


MADHAVAN
ஜூலை 06, 2024 10:47

1997 ல அட்டூழியம் கொஞ்சம் நஞ்சம் இல்லை,


Sridhar
ஜூலை 06, 2024 10:40

நாட்டின் ஜனாதிபதியே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்லவே? அந்த ரீதியிலே MLA ஜனாதிபதிய விட உயர்ந்தவரா என்ன? ஏன் கவர்னர் சபாநாயகரை பதவிப்பிரமாணம் செய்யசொன்னார்னு தெரியல. எப்படி பாத்தாலும் அவர் உத்தரவை மீறியது அரசியல் சாசனத்துக்கு எதிரானதுதான். ஆகவே, MLA பதவி செல்லாததுதான். மேற்கு வங்காளத்தின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது


Ramani Venkatraman
ஜூலை 06, 2024 10:28

,இப்ப மக்கள் புரிந்துகொள்வார்கள்...அரசியல் சாசனத்தை கங்கையில் வைத்துக்கொண்டு சட்டசபையில் கூச்சல் போடுபவர்கள், எவ்வளவு தூரம் அதை மதிக்கிறார்கள் என்பது.


Veerasubramanian
ஜூலை 06, 2024 10:10

கவர்னர் செல்ல முடியாவிட்டால் ஏதாவது காரணம் சொல்லி சபைத் தலைவரைத்தான் பதவி பிரமாணம் செய்து வைக்க நியமனம் செய்திருக்க வேண்டும், இந்த செயலால் மத்திய அரசுக்குத்தான் எம்பராசிங் பொசிஷன்


Mahendran Puru
ஜூலை 06, 2024 09:38

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை ஒரு மாதத்திற்கு மேலாக பதவி பிரமாணம் செய்து வைக்காமல் மலிவு அரசியல் செய்தவர் தன்னால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண் சுப்ரீம் கோர்ட் க்கு போன உடன், சபாநாயகர் இருக்க துணை சபாநாயகரை பதவி பிரமாணம் செய்து வைக்கச் சொல்லுவார். இது எந்த அரசியல் சாசனத்தில் உள்ளது?


அரசு
ஜூலை 06, 2024 08:25

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட நியமிக்கப்பட்ட ஆளுநருக்கு எதற்கு இவ்வளவு அதிகமான அதிகாரம்?


GMM
ஜூலை 06, 2024 07:38

MLA மக்களால் தேர்வு என்றாலும், அதனை அரசு பதவில் உள்ள தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் ஆணைய உத்தரவு படி தான் MLA பதவியில் உள்ளார். கவர்னர் நியமன பதவி என்றாலும், அரசியல் சாசன பதவி. மாநில முதல் குடிமகன். ஜனாதிபதியின் நேரடி அதிகாரி. அவர் உத்தரவுக்கு சபாநாயகர் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் . மக்களுக்கு புரியாது. அரசியல் சாசனத்திற்கு புரியும்.


ramani
ஜூலை 06, 2024 06:57

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன கொம்பு முளைத்திருக்கிறதா? உங்க கட்சி போன்ற கட்சிகள் எல்லாம் எப்படி வெற்ஙபெறுகின்றன என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை