உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக வி.கே.பாண்டியன் அறிவிப்பு

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக வி.கே.பாண்டியன் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: எனது அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் இல்லை என ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். தற்போது, தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக நவீன் பட்நாயக்கின் உதவியாளர் வி.கே. பாண்டியன் அறிவித்துள்ளார்.தமிழகத்தை சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன் (வி.கே.பாண்டியன்) 2000ம் பேட்சை சேர்ந்த ஒடிசா கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவார். சமீபத்தில், அவர் அரசு பொறுப்பை உதறி விட்டு, நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜூ ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் 'வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை. ஒடிசா மக்கள் அதனை முடிவு செய்வார்கள்' என ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் மறுத்து விட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dh1mcwsj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பதவிக்காக வரவில்லை

இந்நிலையில், தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக நவீன் பட்நாயக்கின் உதவியாளர் வி.கே. பாண்டியன் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு உதவி புரியவே அரசியலுக்கு வந்தேன். ஐ.ஏ.எஸ்., பதவியை துறந்து பிஜூ ஜனதா தளத்தில் இணைந்தேன். பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை.

மக்கள் சேவை

மூதாதையர்களின் சொத்துகள் தான் என் வசம் உள்ளன. நான் ஐ.ஏ.எஸ்., பணியில் சேரும் போது இருந்த சொத்துக்களே, இப்போதும் என்னிடம் உள்ளன. மக்களுக்கு சேவையாற்றவே ஐ.ஏ.எஸ்., பணிக்கு வந்தேன். அதன் மூலம் ஒடிசா மக்களின் அன்பை பெற்றேன். கொரோனா காலத்தில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தோம். இவ்வாறு வி.கே.பாண்டியன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

திண்டுக்கல் சரவணன்
ஜூன் 12, 2024 16:16

பாஜக விகே பாண்டியனை அவமானப்படுத்தியது, தமிழர்களை அவமதித்தது போலத்தான்.


Dharmaraj
ஜூன் 11, 2024 20:06

பாண்டியன் அவர்கள் நல்ல திறமையான அதிகாரி தான் .... யாருக்கு தெரியும்...ஒரு சிறிய சந்தேகம் பிஜேபிக்கு .. மறைமுகமாக வேலை .. செய்தாரோ...என


kantharvan
ஜூன் 11, 2024 13:03

நாட்டுக்கு வெளியே இருக்கும் பண்பு நாட்டுக்கு உள்ளே இருக்கும் போது வராது ...என்பதை நீங்கள் உணர வில்லை .


Senyhil
ஜூன் 10, 2024 00:06

அப்போ ஏன் விளக்கெண்ணெய் தமிழ்நாட்டில் வடக்கு மக்களை வெறுக்கிறது


Nagercoil Suresh
ஜூன் 09, 2024 23:31

பாண்டியன் துவண்டு போக வேண்டிய அவசியம் கிடையாது, வடக்கர்கள் தென் இந்தியர்களை பார்த்தாலே ஒருவித அச்சத்தில் தான் அணுகுகிறார்கள் எப்போது நிர்வாகத்தை நம்மை விட்டு புடுங்கி விடுவார்கள் என நினைத்து, அவ்வ்ளவு நிர்வாகத்திறமை உடையவர்கள்..அண்ணாமலையை பொறுத்தமட்டில் அவர் ஏதாவது ஒரு மாநிலக்காட்சியில் சேர நினைப்பது சரியான முடிவு தான், தடுக்கி விழுந்தால் வடக்கர்கள் வரமாட்டார்கள் அருகில் இருப்பவர்கள் தான் காப்பாத்துவார்கள்...


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 10, 2024 03:18

அப்பட்டமான பொய்யை சொல்ல எப்படி வாய் வருகிறது? நீ எத்தனை வட இந்தியர்களுடன் வேலை செய்து இருக்கிறாய்? வெளிநாட்டில் வேலை செய்யும் எனக்கு பல நீ சொல்லும் வடஇந்தியர்கள் தான் உயிர் நண்பர்கள்.


திண்டுக்கல் சரவணன்
ஜூன் 12, 2024 16:13

ஒடிசா - மேற்கு வங்காள மக்கள் தங்களை வடக்கு இந்தியர்கள் என கூறிக்கொள்வது இல்லை. பஞ்சாப் - அரியானா - உத்தரபிரதேச மக்கள் தான் வடக்கு இந்தியா. அவர்கள் யாரும் தென் இந்தியர்களை வெறுப்பது இல்லை. தென் இந்தியர்களை மரியாதையாகவே பார்ப்பார்கள்


Sree
ஜூன் 09, 2024 22:22

பாண்டியன் ஒரு நல்ல அரசு ஊழியர் மட்டும் அல்ல நல்ல நிர்வாக திறமை உள்ளவர் இவர் தமிழ்நாட்டின் அரசியலுக்கு சரி பட்டு வரமாட்டார் . ஒரிஸாவில் சாதாரண மக்கள் ஆதரவு இவருக்கு உண்டு .அதே போல் உ பி அரசில் முத்துக்கருப்பன் IPS செல்வாக்கு உள்ள நபர் யோகிக்கு மிகவும் நெருக்கம் .தமிழகத்தை தவிர தமிழன் எங்கு போனாலும் கோலோச்சுகிறான் .டில்லி மக்களவையில் IAS IFS ICS தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் 80% சதம் இருந்தார்கள் .ஆனால் இன்றைய தமிழ் மாணவர்கள் மத்திய அரசு பணிக்கு விரல் விட்டு சொல்லும் அளவிற்குதான் உள்ளனர் எப்போ தமிழன் திராவிடன் ஆனானோ அப்போதே ஆளை காணோம்


tmranganathan
ஜூன் 11, 2024 07:38

தமிழனின் சுய மரியாதையை அழிப்பவர்கள் நேரு போன்ற அரக்க குணம் கொண்ட தீம்கவினர்


R Dhasarathan
ஜூன் 09, 2024 21:43

சுரம் உள்ள போதே பாடுவதை நிறுத்தி கொள்ள தெரிய வேண்டும்...


Raghavan
ஜூன் 09, 2024 21:15

இங்கு குடும்ப அரசியல் இருக்கும்போது எப்படி சாத்தியம் .


தமிழ்வேள்
ஜூன் 09, 2024 20:16

ஹி..ஹி... துரத்தி விட்டனர் என்று சொல்லு பாண்டியா... ஒரிசா மக்கள் என்ன தமிழர்களா? தமிழர்கள் தான் சூடு சொரணை இன்றி தெலுங்கன் வாலைப் பிடித்து கொண்டு திரிகிறார்கள்..


kantharvan
ஜூன் 11, 2024 13:06

மத வெறி கும்பல் இனவெறியை கையில் எடுத்ததால் வெளியேறி விட்டார். உண்மையில் ஒரிசா மக்களின் நன்மதிப்பையும் அன்பையும் யாராலும் தட்டி பறிக்க முடியாது .


தமிழ்வேள்
ஜூன் 09, 2024 20:13

ஒரிசா மக்கள் என்ன தமிழர்களா? பிற மொழி இன ஆசாமி தங்கள் மாநிலம் ஆள் எப்படி அனுமதிப்பார்கள்? பாண்டியனும் திராவிட பிராடக்ட் ஆக இருந்தால் ஒரிசாவிலும் டாஸ்மாக் ராமசாமி கருத்தியல் விளங்காத சாராய சமூவ நீதி எல்லாம் வந்திருக்கும்.. நல்ல வேளை.. தப்பித்தார்கள் ஒரிசா மக்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை