மேலும் செய்திகள்
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
57 minutes ago
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
1 hour(s) ago
மைசூரு, : குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த நபரை கோவிலுக்குள் விடாமல் தடுத்த கிராமத்தினர், அர்ச்சகருக்கு போலீசார், அரசு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.முதல்வர் சித்தராமையா சொந்த தொகுதியான வருணாவின் கிரலு கிராமத்தை சேர்ந்தவர் நவீன். கல்வியாளரான இவர், தன் கிராமத்தில் உள்ள சம்பு மஹாலிங்கேஸ்வரா கோவிலுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன் சுவாமி கும்பிட சென்றார்.ஆனால் கிராமத்தினரும், கோவில் அர்ச்சகரும் அனுமதி மறுத்தனர். இது தொடர்பாக, அவர் தாசில்தாரிடம் புகார் செய்தார். உடனடியாக வருணா போலீஸ் நிலைய எஸ்.ஐ.,யை தொடர்பு கொண்டு, கிராமத்துக்கு செல்லுமாறு உத்தரவிட்டார். அவருடன் அரசு அதிகாரிகளும் சென்றனர்.தீண்டாமை குறித்து புகார் வந்ததை அடுத்து, கோவில் வளாகத்தில் கிராமத்தினர், அர்ச்சகருடன் அதிகாரிகள் பேசி, இதுபோன்று செய்யக்கூடாது என்று எச்சரித்தனர். அதன்பின், அதிகாரிகள் முன், கோவிலுக்குள் சென்ற நவீன், சுவாமி தரிசனம் செய்தார்.முதல்வரின் வருணா தொகுதியில் இதுபோன்று நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
57 minutes ago
1 hour(s) ago