உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அணுகுண்டுகளுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம்: ராகுலுக்கு அமித்ஷா பதிலடி

அணுகுண்டுகளுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம்: ராகுலுக்கு அமித்ஷா பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிம்லா: 'நாங்கள் மோடியின் தொழிலாளர்கள் அணுகுண்டுகளை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம் என்பதை ராகுலுக்கு சொல்ல விரும்புகிறேன்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள காங்ரா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் அமித்ஷா பேசியதாவது: தே.ஜ., கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறும். ராகுல் 40 தொகுதிகளை தாண்ட மாட்டார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது. அதை விரைவில் மீட்போம். அண்டை நாட்டில் அணுகுண்டுகள் இருப்பதாகக் கூறி, எங்களை காங்கிரஸ் பயமுறுத்த முயற்சி செய்கிறது. நாங்கள் மோடியின் தொழிலாளர்கள் அணுகுண்டுகளை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம் என்பதை ராகுலுக்கு சொல்ல விரும்புகிறேன்.

இலவச சிகிச்சை

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் யார் பிரதமர்?. வளர்ச்சியை உருவாக்குவது பா.ஜ.,வின் நோக்கம். பா.ஜ., ஆட்சியில் 10 கோடி பேருக்கு காஸ் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. 4 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

வேங்கடசுப்பிரமணியன்
மே 25, 2024 19:27

சீனாவல்லவா அடக்கி வாசிக்கிறது. இந்திய நடவடிக்கைகள் அதனை இன்று தனிமைப்படுத்தி வருவது மட்டுமின்றி கை கோர்த்த நாடுகள் ரஷ்யா உட்பட சற்றே விலகி நிற்கிறது


P. VENKATESH RAJA
மே 25, 2024 17:58

எதையும் கண்டு பயப்பட மாட்டோம் என்று பேச்சு அளவில் சொன்னால் மட்டும் போதாது செயலில் இருக்க வேண்டும்


Mahendran Puru
மே 25, 2024 17:28

சீனா என்றால் சப்தநாடியும் அடங்க பயப்படுகிறார்கள் ஏன்?


Kannan Pgs
மே 26, 2024 08:25

அது வந்து அது வந்து.. அதை எப்படி சொல்றது.. இத்தனை சாதனைகளைச் சொன்னவர் 2 கோடி வேலை வாய்ப்பு, விவசாய்களுக்கு இரண்டு மடங்கு வருமானம், பெட்ரோல் எரிவாயு சாதனைகளையும் சொன்னால் நன்றாக இருக்கும்


ஆரூர் ரங்
மே 26, 2024 09:49

காங்கிரசுடன் புரிந்துணர்வு போட்டது சீனாக்காரன். உள்நாட்டிலேயே துரோகிகள் இருக்கும் நிலையில் ஜாக்கிரதையாகவே கையாள வேண்டும்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி