கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், அரசு மருத்துவ கல்லுாரியில் , பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, பெண் பயிற்சி டாக்டரின் குடும்பத்தினரை முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்தார். அவர், வழக்கில், நீதி வழங்கப்படும் என உறுதி அளித்தார். மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் ஜி.ஆர்.கார் அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, முதுநிலை மருத்துவ படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த பயிற்சி பெண் டாக்டர், கடந்த 9ம் தேதி, கருத்தரங்கு வளாகத்தில் மர்மமான முறையில் அரை நிர்வாணக் கோலத்தில் இறந்து கிடந்தார்.பிரேத பரிசோதனையில், கொலை செய்யப்படுவதற்கு முன், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ur3q3kyq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0போராட்டம்
இது குறித்து விசாரித்த போலீசார், சஞ்சய் ராய் என்பவரை கைது செய்தனர். மாணவிக்கு நீதி கேட்டு பயிற்சி டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவியின் குடும்பத்தினரை இன்று (ஆகஸ்ட் 12) முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்தார்.சி.பி.ஐ., விசாரணை
பின்னர், ''வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் விசாரணையில் முன்னேற்றம் எற்படாவிட்டால், சி.பி.ஐ., விசாரணை கோரப்படும். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வழங்கப்படும். மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கை, விரைவில் நீதிமன்றம் விசாரிக்க விரும்புகிறோம்'' என மம்தா தெரிவித்தார்.