உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆட்சிக்கு வந்தவுடன் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்வோம்: அகிலேஷ் தருகிறார் வாக்குறுதி

ஆட்சிக்கு வந்தவுடன் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்வோம்: அகிலேஷ் தருகிறார் வாக்குறுதி

புதுடில்லி: 'நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்வோம்' என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.எக்ஸ் சமூகவலைதளத்தில், அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் குறுகிய கால ராணுவ ஆள்சேர்ப்பு அக்னிபாத் திட்டத்தை, 24 மணி நேரத்தில் ரத்து செய்வோம். மீண்டும் பழைய முறையில் ஆட்சேர்ப்பு நடைபெறும். இவ்வாறு அகிலேஷ் கூறியுள்ளார். அக்னிபாத் திட்டத்தில் பணிபுரியும், ராணுவ வீரர்களுக்கு மத்திய அரசு சலுகைகள் அறிவித்துள்ளது. அதேநேரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்வோம் என அகிலேஷ் கூறியுள்ளார். இது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

venugopal s
ஜூலை 28, 2024 10:57

பாஜகவை நம்புவதை விட இவர் கட்சியை நம்பலாம்!


கண்ணன்
ஜூலை 28, 2024 09:38

ஆட்சிக்கு வந்தவுடன் கொள்ளையடிக்க ஆரம்பிப்போம்


naranam
ஜூலை 27, 2024 23:15

அப்போ இன்னும் 50 வருடங்களாவது ஆகும் என்று சொல்லுங்க ஜி


C.SRIRAM
ஜூலை 27, 2024 21:55

கூமுட்டை அரசியல் வியாதி . நீ ஆட்சிக்கு வந்தால் பார்க்கலாம்


Vijay D Ratnam
ஜூலை 27, 2024 21:44

ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வீர்களா. எங்கப்பா ராசா எங்க, பாகிஸ்தான்லயா, ரூவாண்டாவுலயா அல்லது ஆப்கானிஸ்தான்லயா, இந்தியாவில் வாய்ப்பில்ல ராசா, வாய்ப்பில்லை. குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூவா தருவோம்னு வாய்க்கு வந்தத அள்ளி உட்டு கொஞ்சம் இடங்களை பிடித்தவுடன் ரவுஸை பாரு. அல்லாரும் சேர்ந்து 2024 ல் மோடியை தோற்கடித்திருக்க வேண்டும். முடியவில்லை. நூலிழையில் தப்பிவிட்டார். இப்போ அவரு அடிபட்ட புலி. இனி அந்தப்புலியின் தாக்குதல் உக்கிரமா இருக்கும். ஒங்க கும்பல் 2029 ல சிக்கி சின்னாபின்னம் ஆவப்போவது உறுதிங்கோ. இந்த நாட்டை நாசப்படுத்த ஒங்க பின்னாடி இஸ்லாமிஸ்ட், இவாஞ்சலிஸ்ட், பெரியாரிஸ்ட், மார்க்சிஸ்ட், நக்ஸ்லைட் இருக்காய்ங்க, கான்.,க்ராஸ் மாஃபியா, கட்டுமர மாஃபியா போன்ற ஹிந்து விரோத கும்பல் இருக்காய்ங்க. அது போல உங்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற அவிங்க பின்னாடி ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் தள், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற ஹிந்துத்துவா இருக்காய்ங்க. பார்ப்போம்.


PRSwamy
ஜூலை 27, 2024 20:39

உங்கப்பா ஒரு பாகிஸ்தான் அடிவருடி, தேச துரோகி. நீ எப்படி இருப்ப?


raja
ஜூலை 27, 2024 19:26

அப்படியே நாட்டை தூக்கி பாக்கிஸ்தானிடமும், சீனாக்காரனிடமும் கொடுத்துவிடலாம்.....


kulandai kannan
ஜூலை 27, 2024 19:14

MLA, MP வீட்டு ஆண், பெண் வாரிசுகளுக்கு ராணுவ ப் பணி கட்டாயமாக்கப்படவேண்டும்.


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 27, 2024 19:03

நாட்டை கொள்ளை அடித்து பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்த தறுதலை எல்லாம் பேச வந்தால் இப்படித்தான். இவர்களுக்கு வோட்டை போடும் ஹிந்துக்களை திட்டவேண்டும். ஒரு விஷயமாவது உருப்படியாக நியாயமாக பேசுகிறார்களா?


RAJ
ஜூலை 27, 2024 18:42

அக்னிபத பற்றி ஒன்னும் தெரியாம குருட்டானபோக்குல ஒளரக்கூடாது. முழுசா புரிஞ்சுகிட்டு பேசு.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை