உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆஸ்ட்ராஜெனகா மீது வழக்கு தொடருவோம் மகள் இறந்ததால் தந்தை உருக்கமான பதிவு

ஆஸ்ட்ராஜெனகா மீது வழக்கு தொடருவோம் மகள் இறந்ததால் தந்தை உருக்கமான பதிவு

புதுடில்லி,'கோவிஷீல்டு' தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் உயிரிழந்ததாக கூறப்படும், 20 வயதான காருண்யாவின் பெற்றோர், பிரிட்டனை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான, 'ஆஸ்ட்ராஜெனகா' மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.ஐரோப்பிய நாடான, பிரிட்டனை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான, ஆஸ்ட்ராஜெனகாவும், ஆக்ஸ்போர்டு பல்கலையும் இணைந்து, 'வாக்ஸ்செவ்ரியா' என்ற பெயரில் கொரோனா தடுப்பூசியை தயாரித்தது.

பக்கவிளைவு

இந்த தடுப்பூசியை தயாரித்து வினியோகிக்கும் உரிமம், மஹாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த, 'சீரம் இந்தியா' நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்த நிறுவனம், கோவிஷீல்டு என்ற பெயரில் இந்த மருந்தை தயாரித்து இந்தியாவில் வினியோகித்தது. ஐரோப்பாவில், ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை போட்டுக்கொண்ட பலர் திடீரென உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பிரிட்டன் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.இந்த வழக்கில், ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் சமீபத்தில் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில், இந்த தடுப்பூசி, 'த்ராம்போசிஸ் மற்றும் த்ராம்போசைடோபீனியா' எனப்படும், நாளங்களில் ரத்தம் உறைதல் மற்றும் ரத்த தட்டணு குறைதல் உள்ளிட்ட பக்கவிளை வுகளை மிகவும் அரிதாக ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இந்த தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வேணுகோபாலன் கோவிந்தன் என்பவரது 20 வயது மகள் காருண்யா, 2021ல் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட சில நாட்களில் திடீரென உயிரிழந்தார். அவரைப் போலவே, ரச்சனா கங்கு என்பவரது 18 வயது மகள் ரிதாய்காவும் 2021ல் உயிரிழந்தார். இவர்கள் இருவரும் தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் உயிரிழந்ததை ஆய்வு செய்ய மருத்துவ குழுவை அமைக்க உத்தரவிடும்படி உச்ச நீதிமன்றத்தை இவர்கள் ஏற்கனவே நாடியுள்ளனர்.

ஒப்புதல் வாக்குமூலம்

இந்நிலையில், ஆஸ்ட்ராஜெனகாவின் ஒப்புதல் வாக்குமூலம் இவர்களை மேலும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.இது தொடர்பாக, வேணுகோபாலன் கோவிந்தன் எழுதியுள்ள சமூகவலைதள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:ஏராளமான உயிர்கள் பறிபோன பின், மிக தாமதமாக அந்நிறுவனம் இதை ஒப்புக் கொண்டுள்ளது. ரத்த உறைவால் பல உயிர்கள் பறிபோன பின், 15க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசியின் பயன்பாட்டை நிறுத்திக் கொண்ட போதே, கோவிஷீல்டு வினியோகத்தை சீரம் இந்தியா நிறுவனம் நிறுத்தி இருக்க வேண்டும்.பொது சுகாதாரம் என்ற பெயரில் வினியோகம் மீண்டும் தொடர்ந்து, மேலும் பல உயிர்கள் பறிபோவதை தடுக்கும் நோக்கத்தில், ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் உட்பட இதில் தொடர்புடைய அனைவர் மீதும் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். என்னைப் போலவே தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்த எட்டுக்கும் மேற்பட்ட பெற்றோர் என்னுடன் இணைந்துஉள்ளனர்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

jss
மே 04, 2024 17:26

எந்த அலோபதி மருந்தில் பக்க விளைவு இல்லை? எல்லா மருந்துகளுக்கும் பக் விளைவு உண்டு. சித்தாவாக இருந்தாலும், யுனானி , ஹோமியோபதி என்று எல்லாவற்றிற்கும் பக்க விளைவு உண்டு. சில உடனே விளைவை கொடுக்கும் சில 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு பிறகும் கொடுக்கும். விளைவுவில்லாத மருந்து என்பதே கிடையாது.


Yoga Ravi Chennai
மே 04, 2024 11:06

covishield இன்ஜெக்ஷன் போட அரசாங்கம் மறைமுகமாக அழுத்தம் கொடுத்தது தமிழ்நாட்டில் உள்ள சித்த மருத்துவ சிகாமணிகள் இதனை நிச்சயம் குணப்படுத்த முடியும் என்று பிரதமரிடம் அழுத்தம் கொடுக்காமல் இருந்து விட்டார்கள் திரு வீரபாபு நோயாளிகளுக்கு மேல் மருத்துவம் செய்து சித்த மருத்துவம் உயர்ந்தது என்று நிரூபித்தார் நான் அந்த இன்ஜெக்ஷன் போட்ட பிறகு பலமுறை பை பிபி ஏறிப் போய் பலமுறை மருத்துவம் செய்திருக்கிறேன் தற்போது எப்போது வேண்டுமானாலும் ரத்த அழுத்தம் அதிகமாகி நான் ஆங்கில மருத்துவரிடம் சென்று வருகிறேன் தடுப்பு ஊசியின் பக்க விளைவு நான் தவித்துக் கொண்டிருக்கிறேன்


Apposthalan samlin
மே 04, 2024 10:28

விவேக் மாதிரி பல பேர் இறந்து உள்ளார்கள் ஆடும் போதும் பாடும் போதும் பல பேர் இறந்து உள்ளார்கள் விவேக் உடலில் எந்த பிரஜ்னயும் இல்லாதவர் தினம் தோறும் யோகா செய்பவர் என் மனைவிக்கு கூட இந்த பாதிப்பு இருந்தது நான் இஷடம் இல்லாமல் தான் ஊசி போட்டேன் குறைந்த வயதில் ஏகப்பட்ட பேர் இறந்து போய் விட்டார்கள் சீரம் நிறுவனத்தின் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்


ஆரூர் ரங்
மே 04, 2024 11:05

பக்க விளைவுகள் இல்லாத மருந்துகள் இல்லவே இல்லை. பல கோடி பேரின் உயிரைக் காப்பாற்றிய தடுப்பூசி மருந்துகளை எதிர்ப்பவர்களை சமூக விரோதிகளாகவே எண்ணத் தோன்றுகிறது.


GoK
மே 04, 2024 10:05

நூறாண்டுகளில் கண்டிராத தோற்று நோய் உலகமெங்கும் பரவி தினமும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் மடிந்து வந்த நிலையில் விஞ்ஞானிகள் மருத்துவர்கள் இரவு பகலாய் பாடுபட்டு அரசுகள் அனுமதி பெற்று இந்த தடுப்பூசிகள் போடப்பட்டன சாதாரணமாக ஏழு எட்டு ஆண்டுகள் எடுக்க கூடிய ஒரு முறை மாற்றப்பட்டு வெகு குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது இன்னும் ஆராய்ச்சி தொடர்கிறது இந்த தடுப்பூஸி ஒவ்வாமல் உலகெங்கும் சிலர் மரணமடைந்துள்ளார்அந்தந்த நாடுகளில் அரசுகள் இவற்றை கவனித்து ஆவண செய்ய வேண்டும் செய்வார்கள் விஞ்ஞானிகளும் மருத்துவர்கள் குழுக்களும் தடுப்பூசியை மேலும் திறம்பட செய்யும் முயற்சியில் உள்ளனர் அவர்கள் வெற்றி பெற வேண்டும் மீண்டும் இந்த மாதி தொற்றுநோய் வராமலிருக்க வேண்டும்


vbs manian
மே 04, 2024 08:57

இப்போது என்ன செய்வார்கள்


சிவம்
மே 04, 2024 07:40

அவரவர் வீட்டு ஆண்கள் பெண்கள் குழந்தைகள் அவர்களுக்கு மட்டுமே முக்கியம். அந்த பெற்றோரின் மன நிலை மிகவும் வருந்தத்தக்கது. இந்த தொற்று நோய் வந்த பிறகு தான் தடுப்பூசி ஆராய்ச்சி துவங்கி மிக குறுகிய காலத்தில் மருந்து தயாரிக்கபட்டது ஒரு சாதனை. பொதுவாக இது போன்று தடுப்பூசி பயன் பாட்டிற்கு வருவதற்கு, பல சோதனைகளுக்கு பிறகு 10 வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் கோவிட் விஷயத்தில் மிக விரைவில் தடுப்பூசி அவசியமா இருந்தது. அதனால் ரிஸ்க் எடுக்கபட்டுதான் பயன் பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. யார் மீது தவறு என்று சொல்ல இயலாது. இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு ஆறுதல் மட்டுமே சொல்ல முடியும்.


Varadarajan Nagarajan
மே 04, 2024 07:05

யாருக்கும் தனது அருமை மகளையோ மகனையோ இழந்தால் தாளாத சோகம் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை ஆனால் அதற்க்கு யார்மீது பழி போடலாம் என தேடுவதும், வழக்கு தொடுத்து நஷ்ட்டஈடு கேட்பதும் அந்த இழப்பை ஈடுசெய்திடமுடியாது அது தீர்வும் அல்ல ஒருவேளை அந்த தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருந்திருந்தால், கொரோன பெருந் தொற்றால் மரணமடையாமல் கண்டிப்பாக இன்று உயிரோடு இருந்திருப்பர் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை எனவே இதுபோன்ற வழக்குகள் பொருளாதார நிவாரணமோ அல்லது விளம்பரமோ வேண்டுமானால் கிடைக்கலாம், கண்டிப்பாக இறந்த மக்கள் மீண்டு வரப்போவதில்லை


K.Muthuraj
மே 04, 2024 11:10

முற்றிலும் இந்தியாவில் தயாரான கோவாக்ஸின் மருந்தினை இந்தியர்கள் புறக்கணித்ததின் விளைவு கோவாக்ஸின் சதவீத வெற்றி கொடுத்தது ஆனால் சதவீத பக்கவிளைவுகள் அற்றது அதனுடைய உயிரி செயல்பாடுகளின் அடிப்படையில் விலையும் மிக மிக மலிவானது நிறைய அந்நிய செலாவணி மிச்சம் ஆகியிருக்கும் மோடி ப்ரோமொட் செய்ததினால் அதனை அரசியல் ஆக்கினார்கள்


J.V. Iyer
மே 04, 2024 04:18

எல்லா மருந்துகளிலும் இந்த ரிஸ்க் உண்டு பல மருந்துகள் கலந்தாலும் இது நடக்கும்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ