ஜெயிக்க என்னென்ன செய்யலாம்: கேரளாவில் மூன்றுநாள் ஆர்.எஸ்.எஸ் மாநாடு
பாலக்காடு: ஆர்.எஸ்.எஸ் சின் மூன்று நாள் கூட்டம் கேரளா மாநிலத்தில் துவங்க உள்ளது. இதில் நான்கு மாநில தேர்தல் குறித்தே முக்கிய அஜண்டாவாக இடம் பெற உள்ளது.கேரள மாநிலம் பாலக்காட்டில் ஆர்.எஸ்.எஸ் சார்பி்ல் மூன்று நாள் மாநாடு துவங்கி உள்ளது. மாநாட்டில் ஆர். எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், சர்கார்யவா தத்தாத்ரேயா ஹோசபாலே, பா,ஜ., தலைவர் ஜெ.பி.,நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களுடன் சர்கார்யாவாக்கள் கிருஷ்ணகோபால், முகுந்தா சி ஆர், அருண்குமார், அலோக் குமார், ராம்தத் சக்ரதர், அதுல் லிமாயே உள்ளிட்ட 90 அகில இந்திய காரியகர்த்தாக்கள் உட்பட 230 பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். கூட்டத்தின் துவக்கத்தில் வயநாடு நிலச்சரிவின் போது ஆர். எஸ்.எஸ் தொண்டர்கள் வழங்கிய உதவிகள் குறித்த விவரங்கள் பகிரப்பட்டது. மேலும் பணியின் அனுபவங்களை களப்பணியாளர்கள் பகிர்ந்துகொள்வர் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து நடைபெறும் கூட்டங்களில் தற்போதைய சூழ்நிலை, சமீபத்திய முக்கிய நிகழ்வுகள் சமூக மாற்றத்தின் பிற பரிமாணங்கள் மற்றும் தேசிய நலன் சார்ந்த பல்வேறு விஷயங்களின் பின்னணியில் உள்ள திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும். மேலும் பல்வேறு விஷயங்களில் ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்தும் விவாகதிக்க்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆர்எஸ்எஸ் தனது வருடாந்திர தேசிய ஒருங்கிணைப்பு மாநாட்டை கேரளாவில் நடத்துவது இதுவே முதல் முறை. மாநிலம் முழுவதிலும் இருந்து 11 பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.முன்னதாக ஆர்.எஸ்.எஸ்.,அமைப்பை சேர்ந்த சுனில் அம்பேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் வரும் 2025-ம் ஆண்டு விஜயதசமி அன்று இந்த அமைப்பு தனது நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், சமூக சீர்திருத்தம் மற்றும் தேசத்தை கட்டியெழுப்ப ஐந்துவிதமான முயற்சிகளை துவங்க உள்ளது என கூறினார்.