உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவால் என்ன பயங்கரவாதியா?: டில்லி ஐகோர்ட்டில் வக்கீல் வாதம்

கெஜ்ரிவால் என்ன பயங்கரவாதியா?: டில்லி ஐகோர்ட்டில் வக்கீல் வாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சிபிஐ கைது நடவடிக்கைக்கு எதிராக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மனு மீதான விவாதத்தின் போது, 'கெஜ்ரிவால் ஒரு முதல்வர். அவர் பயங்கரவாதி இல்லை'' என டில்லி ஐகோர்ட்டில் அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மனு மீதான விசாரணை ஜூலை 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, கெஜ்ரிவாலை ஜூன் 26ம் தேதி திஹார் சிறையில் வைத்து கைது செய்தது. சிபிஐ கைது நடவடிக்கைக்கு எதிராக டில்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (ஜூலை 17) விசாரணைக்கு வந்தது.

பயங்கரவாதி அல்ல...!

அப்போது கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‛‛ ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருக்க வேண்டும் என சி.பி.ஐ., விரும்பியதால், அவரை வஞ்சகமாக கைது செய்துள்ளது. கெஜ்ரிவால் வெளியே வந்துவிடுவார் என்று சி.பி.ஐ., உணர்ந்தது. அதனால் அவரைக் கைது செய்தது.

ஒத்திவைப்பு

அவர் ஒரு முதல்வர். பயங்கரவாதி இல்லை. சிபிஐயை குறை கூற விரும்பவில்லை. மூன்று நாட்களுக்கு முன்பு இம்ரான் கான் ஒரு வழக்கில் விடுவிக்கப்பட்டார், ஆனால் மற்றொரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்'' என வாதிட்டார். இதையடுத்து மனு மீதான விசாரணை ஜூலை 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கெஜ்ரிவால் ஜாமின் மனு மீதான விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

M Ramachandran
ஜூலை 25, 2024 20:05

பயங்க்கரவாதிக்கு துணைபோகும் நபர் யாராக இருக்க முடியும்


Parasumanna Sokkaiyer Kannan
ஜூலை 19, 2024 12:52

Most of the politicians always deceive their voters by saying this and that. Kejriwal is one among them.


R Sriram
ஜூலை 18, 2024 19:47

இவர் பயங்கரவாதியை விட மோசமானவர்.


Babu
ஜூலை 18, 2024 15:52

எதிர்க் கட்சிக்கு மட்டும்.


Azar Mufeen
ஜூலை 18, 2024 11:16

வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவன் புனிதன், மனிதருள் மாணிக்கம் அவனை தொடக்கூட முடியாது, இவர் தரமான கல்வியை கொடுத்ததால் பயங்கரவாதிதான் பிஜேபிக்கு


R.Varadarajan
ஜூலை 18, 2024 06:25

மக்கள்வரிப்பணத்தை தன்னுடைய தாக்கிக்கொள்ளும் ஊழல்வாதி தீவிரவாதியை விட ஆபத்தானவன் , நாட்டையே காசுக்காக விற்கக்கூடியவன் , எதையும் செய்வான்.


J.V. Iyer
ஜூலை 18, 2024 00:04

இவன் ஒரு பயங்கரவாதிதான். உடனே இவனை நாடு கடத்தவேண்டும்.


Matt P
ஜூலை 17, 2024 23:06

ஊழலும் பயங்கரவாதம் தான். அவ்வப்போது வூழல்வாதிகள் கண்டுபிடிக்கப்பட்டு,தண்டனை கிடைக்கப்பெறுவதால் தான்,நாடு சீராக போய் கொண்டிருக்கிறது.அப்படி நடக்காவிட்டால் நாட்டில் ஏழைகள் பெருகி நாட்டில் பயங்கரவாதவிளைவுகள் ஏற்படுவதை தவிர்க்கமுடியாது...


subramanian
ஜூலை 17, 2024 22:08

பயங்கரவாதியைவிட , அவனுக்கு ஆதரவு தருபவன் அதிகம் ஆபத்தானவன். ஆமாம் கெஜ்ரிவால் தேசத்திற்கு ஆபத்தானவர்.


தாமரை மலர்கிறது
ஜூலை 17, 2024 19:54

ஹை கோர்ட் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் தான் உள்ளது. சுப்ரிம் கோர்ட் மாதிரி தன்னிச்சையான அமைப்பு கிடையாது. அதனால் கெஜ்ரி தப்பிக்க இயலாது. ஜாமீன் கிடைக்காது. நூறுகோடி ரூபாயை லவுட்டிய கெஜ்ரிக்கு ஜெயிலில் கிடந்தது சாக வேண்டும் தான்.


subramanian
ஜூலை 17, 2024 22:04

என்ன உளர்றீங்க , ஹை கோர்ட் எப்படி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும்?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை