உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இப்போ தேர்தல் நடந்தால் எப்படி இருக்கும்; கருத்துக்கணிப்பில் தெரியவருவது இதுதான்!

இப்போ தேர்தல் நடந்தால் எப்படி இருக்கும்; கருத்துக்கணிப்பில் தெரியவருவது இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டில்லி: தற்போதைய சூழலில் லோக்சபா தேர்தல் நடைபெற்று இருந்தால், பா.ஜ.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக 'லேட்டஸ்ட்' கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று, தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. 400 இடங்களுக்கு மேல் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்த பா.ஜ.,வுக்கு வெறும் 240 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. இது கடந்த தேர்தலை காட்டிலும் 63 இடங்கள் குறைவு. அதேபோல, காங்கிரசும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அதிகப்படியான இடங்களை பெற்றது. 2014ல் 44 இடங்களையும், 2019ல் 52 இடங்களையும் வென்றிருந்த காங்கிரஸ், 2024 லோக்சபா தேர்தலில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது.

கருத்துக்கணிப்பு

இந்த நிலையில், தேசத்தின் மனநிலை என்ற தலைப்பில் இந்தியா டுடே நிறுவனம், ஜுலை 15ம் தேதி முதல் ஆக., 10ம் தேதி வரையில் கருத்துக்கணிப்பை நடத்தியது. அதன்படி, ஆக.,22ல் லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டிருந்தால், பா.ஜ., கூட்டணிக்கு 335 தொகுதிகளும், இண்டியா கூட்டணிக்கு 166 தொகுதிகளும் கிடைத்திருக்கும் என்று தெரியவந்துள்ளது.

பா.ஜ.,வுக்கு ஆதரவு

லோக்சபா தேர்தலில் பெற்றதை விட பா.ஜ.,வுக்கு 4 இடங்கள் கூடுதலாக கிடைக்கும்; ஏப்ரல் - மே மாதங்களில் நடந்த தேர்தலில் 240 தொகுதிகளை வென்றிருந்த பா.ஜ., தற்போது 244 தொகுதிகளை கைப்பற்றி இருக்கும் என்கிறது கணிப்பு. மேலும், பா.ஜ.,வின் வாக்கு சதவீதம் 36.56 ஆக தேர்தலில் குறைந்திருந்தது. தற்போது தேர்தலை நடத்தினால், அது 38 சதவீதமாக அதிகரிக்கும் என்றும், ஒட்டுமொத்தமாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 43.7 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ்

அதேபோல, காங்கிரசுக்கு 99 இடங்களில் இருந்து 106 இடங்களாக கிடைத்திருக்க வாய்ப்புள்ளதாகவும் சர்வேயில் தெரிய வந்துள்ளது. 2019ல் 19.46 சதவீதம் இருந்த காங்கிரஸ் வாக்கு சதவீதம், 2024ல் நடந்த தேர்தலில் 21.20 சதவீதமாக அதிகரித்தது. அதுவே, ஆக.,22ல் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால், காங்கிரசுக்கு 25.4 சதவீதம் வாக்குகள் கிடைத்திருக்கும் என்றும் கணிப்பில் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

அப்புசாமி
ஆக 23, 2024 16:39

இது மாதிரி ஆளுங்கதான் போன தேர்தலுக்கு புண்ணாக்கு கருத்துக் கணிப்பு வெளியிட்டு பின்னாடி மன்னிப்பும் கேட்டாங்க.


venugopal s
ஆக 23, 2024 16:21

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா ஆகி விடுவார் என்பது போல் உள்ளதே!


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஆக 23, 2024 13:57

தேர்தல் தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியிட்டு மக்களை குழப்பிக் கொண்டிருந்தார்கள். இப்போது மாதா மாதம் ஆரம்பித்து விட்டார்கள். மக்கள் தெளிவே அடைய கூடாது என முடிவே செய்து விட்டார்கள். ஒரு தொகுதியில் இருந்து இலட்சம் வாக்குகள் இருந்தால் அதில் சில ஆயிரம் சேம்பிள் பீஸ் எடுத்து இருபது இலட்சத்துக்கு புகுத்தினால் எப்படி சரியாக இருக்கும். கருத்து கணிப்பு என்றால் ஒரு எம்பி தொகுதியில் உள்ள ஒவ்வொரு வார்டில் இருந்தும் குறைந்தது 10 சதவீதம் கணக்கெடுத்து அதன் படி கருத்து கணிப்பு வெளியிட்டால் மட்டுமே சில சமயம் சரியாக இருக்கும். அதிலும் கருத்து கணிப்பு களப்பணியாளர் நடு நிலைமையோடு செயல் பட வேண்டும். அவ்வாறு எடுத்த கணிப்பினை நடுநிலைமையோடு வகைப்படுத்த வேண்டும். அவ்வாறு வகைப்படுத்தப்பட்ட கணிப்பை நடுநிலையோடு வெளியிட வேண்டும். இதெல்லாம் நமது நாட்டில் சாத்தியம் இல்லை.


INDIAN
ஆக 23, 2024 13:49

தேர்தல் வந்து மூன்று மாதம் ஆகவில்லை , அதற்குள் இப்படி ஒரு கருத்து கணிப்பா , ஒருவேளை இப்படி இருக்குமோ 350 லிருந்து 400 இடங்கள் கணித்த ஊடகங்கள் 240 வந்த இராகு வாய் திறக்கவில்லை, தற்போது 240 இடங்களைவிட அதிகமாக பாஜக வென்று இருக்கும் என்றால் 400 க்கு 240 என்றால் 300க்கு 180 இடங்கள் கிடைக்கும் ஏற்று சொல்கிறார்களா ?


Barakat Ali
ஆக 23, 2024 12:56

இது போன்ற செய்திகளை காங்கிரஸ்-திமுக சொம்புகள் முழுமையாக படிக்காமல் கருத்திடுகிறார்கள் ...


MADHAVAN
ஆக 23, 2024 12:25

தினமும் இப்படி ஒப்பாரி வைப்பதுதான் பொழுதுபோக்கோ, போங்கடா புறம்போக்குகளா


GSR
ஆக 23, 2024 11:33

கருத்து கணிப்பு? ..... ஹாஹாஹா


RAJ
ஆக 23, 2024 10:48

போடா டேய்ய்ய்... விஸ்வ குருவை அசைக்க முடியாது.. கடைசி வர ஆப்போடோதான் உட்காரனும்..


நிக்கோல்தாம்சன்
ஆக 23, 2024 10:41

மதத்தை முன்னிறுத்தி நாட்டை காட்டிக்கொடுப்பது தான் ஆப்பா ?


Sridhar
ஆக 23, 2024 13:11

பிரதமரும் பிஜேபியும் இந்தியாவை முன்னிறுத்துகிறது. ராவுல் வின்சி மதத்தையும் ஜாதியையும் முன்னிறுத்துகிறான். அதனால் க்ரிப்டோகளுக்கு அவனைக்கண்டால் பிடித்திருக்கிறது.


Karunakaran
ஆக 23, 2024 10:27

ஐயா ,சும்மா கொளுத்தி போடுங்க. வதந்தி பரவட்டும்.


மேலும் செய்திகள்