உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அனந்தகுமாருக்கு சரிவு ஏன்? எம்.எல்.ஏ., கருத்து

அனந்தகுமாருக்கு சரிவு ஏன்? எம்.எல்.ஏ., கருத்து

தார்வாட், : 'அரசியல் சாசனத்தை மாற்றுவது குறித்து பேசியதால், முன்னாள் எம்.பி., அனந்தகுமார் ஹெக்டேவுக்கு சீட் கை நழுவியது,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., அரவிந்த் பெல்லத் தெரிவித்தார்.தார்வாடில் நேற்று அவர் அளித்த பேட்டி:அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என, எந்த அர்த்தத்தில் முன்னாள் எம்.பி., அனந்த்குமார் ஹெக்டே பேசினார் என்பது தெரியவில்லை. இப்படி பேசியதற்காக அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது. மத்திய அமைச்சரவையில் சேர்க்காமல் ஒதுக்கப்பட்டார். லோக்சபா தேர்தலில், கட்சி மேலிடம் சீட்டும் கொடுக்கவில்லை.அனந்தகுமார் ஹெக்டே பேச்சை பா.ஜ., தலைவர்களும் கண்டித்தனர். இந்த விஷயத்தை காங்கிரசார் தேவையின்றி பெரிதுபடுத்தினர். விஷயத்தை பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமல் பேசுவது தவறு.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை