உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அமைச்சரை சந்தித்தது ஏன்? தேவகவுடாவுக்கு சிவகுமார் கேள்வி!

மத்திய அமைச்சரை சந்தித்தது ஏன்? தேவகவுடாவுக்கு சிவகுமார் கேள்வி!

பெங்களூரு : ''முன்னாள் பிரதமர் தேவகவுடா, தன் குடும்பத்தை பாதுகாக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருக்கலாம்,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: என்னையும், முதல்வர் சித்தராமையாவையும், சிறையில் தள்ள எதிர்க்கட்சியினர் ஏதேதோ செய்கிறார்கள். இதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். பா.ஜ.,வின் ஊழல் ஆதாரங்களை வெளியிடுவோம். ஆதாரங்களை வெளியிட, நாள், நட்சத்திரம் கூடி வரட்டும். ஊழலை பற்றி விவாதிக்க, பா.ஜ., தயாராக இல்லை.முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது ஏன். தன் குடும்பத்தை பாதுகாக்க, தேவகவுடா மத்திய அமைச்சரை சந்தித்திருக்கலாம். அல்லது எங்களை பற்றிய புகார் பட்டியலை கொடுக்க சென்றிருக்கலாம்.குமாரசாமியின் சகோதரருக்கு சொத்துகள் எப்படி வந்தன என்பதை விவரிப்பேன். நான் தலித்துகளுக்கு அநியாயம் செய்து, சொத்து சம்பாதித்ததாக குற்றம்சாட்டுகிறார். இதை பற்றிய ஆதாரங்களை வெளியிடட்டும். நாங்கள் பீன்ஸ், கடலைக்காய், கேழ்வரகை தின்பவர்கள். அதையே இப்போதும் விளைவிக்கிறோம். எங்களின் சொத்து எவ்வளவு என்பதை, அவர்கள் கூறட்டும்.முதல்வர், துணை முதல்வரை சக்கர வியூகத்தில் சிக்க வைப்பதாக, எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். இத்தகைய குற்றசாட்டுகள் வழக்கமானவை. இதை சமாளித்து போராடுகிறோம். இனியும் போராடுவோம்.தேவகவுடா குடும்பத்தினரின் ஆவணங்களை, நாங்களும் வெளியிடுவோம். அதற்கு சரியான நேரம் வர வேண்டும். அவர்கள் எங்களுடைய ஆதாரங்களை வெளியிடட்டும். அதன்பின் நாங்களும் வெளியிடுகிறோம். தொலைக்காட்சியில் வேண்டாம், சட்டசபைக்கு விவாதிக்க குமாரசாமியின் அண்ணன் ரேவண்ணாவை அனுப்பட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை