உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கன்வர் யாத்திரையில் பெயர் பலகை ஏன்? சுப்ரீம் கோர்ட்டில் உ.பி., அரசு விளக்கம்!

கன்வர் யாத்திரையில் பெயர் பலகை ஏன்? சுப்ரீம் கோர்ட்டில் உ.பி., அரசு விளக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கன்வர் யாத்திரையை வெளிப்படை தன்மையுடன் அமைதியாக நடத்தவும், உணவு விஷயத்தில் பக்தர்கள் இடையே குழப்பத்தை தவிர்க்கும் நோக்கத்திலும் தான்.உரிமையாளர் மற்றும் ஊழியர்களின் பெயர் பலகையை உணவகங்களில் வைக்க உத்தரவிடப்பட்டதாக உத்தர பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில், சிராவண மாதத்தில் ஆண்டுதோறும் கன்வர் யாத்திரை நடப்பது வழக்கம்.வட மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து, உத்தரகண்டின் ஹரித்வாரில் இருந்து புனிதநீர் எடுத்துச் சென்று தங்கள் ஊரில் உள்ள சிவன் கோவில்களில் அபிஷேகம் செய்வர். இந்த ஆண்டுக்கான கன்வர் யாத்திரை ஜூலை 22 முதல் ஆக., 6 வரை நடக்கிறது.இந்நிலையில், பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் வழித்தடங்களில் உள்ள உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பெயர் அடங்கிய பலகையை வாடிக்கையாளர் கண்ணில்படும்படி மாட்டி வைக்க உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மத்திய பிரதேச அரசுகள் சமீபத்தில் உத்தரவிட்டன.இது முஸ்லிம் வியாபாரிகளை ஒடுக்குவதற்கான நடவடிக்கை என்ற விமர்சனம் எழுந்தது. மாநில அரசுகளின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், பெயர் பலகை வைக்கும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து கடந்த 22ல் உத்தரவிட்டது.மேலும், மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. இதன்படி, உ.பி., அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் விபரம்:கன்வர் யாத்திரையில், ஆண்டுதோறும் 4.07 கோடி பக்தர்கள் பங்கேற்கின்றனர். யாத்திரை செல்லும் பாதையில் அசைவ உணவு விற்க கூடாது என்பதை தவிர, வேறு தடைகள் இல்லை.யாத்திரையை வெளிப்படை தன்மையுடன் அமைதியான முறையில் நடத்தவே பெயர் பலகை வைக்க உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த உத்தரவு இரண்டு வார காலத்திற்கு மட்டுமே பொருந்தும்.இதில், பங்கேற்கும் கோடிக்கணக்கான பக்தர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். பயபக்தியுடன் காலணி கூட அணியாமல் யாத்திரை செல்வர். உணவு விஷயத்தில் சிறிய குழப்பம் ஏற்பட்டாலும் மத ரீதியாக அவர்கள் புண்படுவர். இது மிகப் பெரிய கலவரங்களுக்கு வழிவகுத்துவிடும். அது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கவே பெயர் பலகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ம.பி., மற்றும் உத்தரகண்ட் அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதை தொடர்ந்து, பெயர் பலகை வைக்க பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை நீட்டித்த உச்ச நீதிமன்றம், விசாரணையை ஆக., 5க்கு ஒத்தி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

AMLA ASOKAN
ஜூலை 28, 2024 09:36

இந்துக்கள் அசைவ உணவகங்கள் நடத்துவதில்லையா? இத்தனை வருடங்களாக யாத்திரையில் விரதம் இருப்பவர் எதையும்விரும்பி எந்த உணவகத்திலும் சாப்பிட்டு வந்துள்ளார். முஸ்லிம்களும் உணவு அல்லாத பழக் கடைகள் , டீ கடைகள் என பல வணிகங்களை யாத்திரை செல்லும் வழியில் நடத்தி வந்துள்ளனர். பெயர் பலகை வைப்பதன் நோக்கமே முஸ்லிம்களை குறிவைப்பதாகும். உத்தர பிரதேசத்தில் முஸ்லிம்கள் BJP க்கு வாக்கு அளிக்கவில்லை என்ற வஞ்சகத்தினை தீர்த்துக்கொள்ளவும் , மதவெறியை தூண்டவும் யோகி அரசு இந்த ஆணையை பிறப்பித்துள்ளது. நீதிமன்றம் வணிகம் செய்ய அனைவருக்கும் உரிமை உள்ளது என கூறி மதச்சார்பின்மையை காப்பற்றியுள்ளது . இந்து முஸ்லீம் ஒற்றுமை ஓங்குக


Swaminathan L
ஜூலை 27, 2024 20:32

அந்த இரண்டு வாரங்களுக்கு அந்த வழித்தடத்தில் எங்கும் அசைவ உணவு விற்பனை கூடாது என்கிற ரூலை, அந்த வழித்தடத்தில் இஸ்லாமியர் நடத்தும் உணவகங்களிலும் கடைப்பிடித்தால் வேண்டும். அவ்வகையில், உணவு பற்றி வேறென்ன குழப்பம் உண்டாகும்? முற்றிலும் சைவ உணவு மட்டுமே தயாரிக்கையில் ஹலால் உணவு போன்ற விளம்பரத்திற்கு அவசியமில்லை. உணவகங்களில் முதலாளிகள் பெயர் மட்டுமல்ல, அங்கே உணவு தயாரிப்பவர், பரிமாறு பவர், மேலாளர் போன்றவரின் பெயர் விபரங்களையும் எழுதி வைக்க வேண்டும். அப்படியான தகவல்களை ஆங்கில செய்தி ஊடகங்கள் சில நாட்கள் முன்பு காணொலியில் காண்பித்தன. இந்தத் தகவல்களைப் படிக்கும் யாத்திரை செய்பவர்கள் எங்கு உணவு அருந்த வேண்டும் என்று முடிவு செய்ய வழி பிறக்கிறது. இந்து யாத்திரிகர்கள் இந்துக்கள் நடத்தும் உணவகங்களை பெருமளவில் தேர்ந்தெடுத்தால் அது இஸ்லாமியர் நடத்தும் உணவகங்களைப் புறக்கணிக்கும், அவர்கள் வர்த்தகத்தை நலிவாக்கும் விளைவை உண்டாக்கும். இதைத் தான் எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டி குற்றம் சொல்கின்றன. உச்சநீதிமன்றம், இந்த காரணத்தால் இடைக்காலத் தடையை நீட்டித்துள்ளது. மற்ற இரு மாநில அரசுகளும் வேறு காரணம் எதுவும் சொல்ல வழியின்றி அமைதி காக்கின்றன.


ஆரூர் ரங்
ஜூலை 27, 2024 12:21

எச்சிற் படுத்திய உணவை நீதிமான் சாப்பிடுவாரா?


ஆரூர் ரங்
ஜூலை 27, 2024 11:23

கேரளா மலப்புரம், கள்ளிக்கோட்டை பகுதியிலுள்ள பல ஊர்களில் நோன்பு மாதத்தில் எந்த மதத்தினரும் உணவுப் பண்டங்களை விற்க முடியாது. மாலை வரை ஓட்டலைத் திறக்கவும் விட மாட்டார்கள். அதற்கெல்லாம் மதசார்பற்ற மன்றம் ஒண்ணும் செய்யாது


ஆரூர் ரங்
ஜூலை 27, 2024 11:18

உரிமையாளர், சமையல் செய்பவர்கள் பெயர்களை வெளியிட வற்புறுத்துவது அரசின் பொறுப்பு.


பேசும் தமிழன்
ஜூலை 27, 2024 10:44

இதிலே முஸ்லீம் வியாபாரிகளை ஒடுக்க எங்கே இருந்து வருகிறது ??? வீண் சச்சரவுகளை போக்க கடைக்கரர்களின் பெயரை எழுதி வையுங்கள்


karthik
ஜூலை 27, 2024 08:34

முஸ்லீம் வியாபாரிகள் எதற்க்காக தங்கள் உண்மை பெயரை மறைத்து வியாபாரம் செய்கிறார்கள் ???


ஆரூர் ரங்
ஜூலை 27, 2024 12:20

துப்பு ?தெரியக்கூடாதே.


kulandai kannan
ஜூலை 27, 2024 07:46

நீதிபதிகளைப் பொறுத்தவரை தேர்தல் பத்திர விஷயங்களில் தான் வெளிப்படைத்தன்மை வேண்டும். உணவு விஷயங்களில் அல்ல.


GMM
ஜூலை 27, 2024 07:33

உரிமையாளர்கள், ஊழியர்கள் பெயர் பலகை வைக்க உத்தரவு. பொதுவான விதி. நீதிமன்றம் தனக்கு சர்வ அதிகாரம் உள்ளது என காட்டிக்கொள்ள தான் பயன்படும். நீதிக்கு தேவையில்லாதது.


Kasimani Baskaran
ஜூலை 27, 2024 07:24

நான் என்ன சாப்பிடிய வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். நீதித்துறை அல்ல. மதச்சார்பற்று இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஓவரானது, ஒருதலைப்பட்சமானது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை