உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனநாயக நாட்டில் செங்கோல் எதற்கு?: திரிணமுல் காங்.,எம்.பி., மஹூவா சர்ச்சை பேச்சு

ஜனநாயக நாட்டில் செங்கோல் எதற்கு?: திரிணமுல் காங்.,எம்.பி., மஹூவா சர்ச்சை பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜனநாயக நாட்டில் செங்கோல் எதற்கு? என திரிணமுல் காங்.,எம்.பி., மஹூவா மொய்த்ரா லோக்சபாவில் பேசுகையில் குறிப்பிட்டார். இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது. இது குறித்து, லோக்சபாவில், மஹூவா மொய்த்ரா பேசியதாவது: இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு செங்கோலுடன் அழைத்து வரப்பட்டார். மன்னர் ஆட்சியின் அடையாளம் தான் செங்கோல். ஜனநாயக நாட்டில் செங்கோல் எதற்கு?. எதிர்க்கட்சிகளை பா.ஜ., எதுவும் செய்ய முடியாது. நீங்கள் (பா.ஜ.,) மைனாரிட்டி ஆகிவிட்டீர்கள் என்பதை இன்றும் உணரவில்லை. நெருப்பாற்றில் நீந்தி வந்த எங்களை நீங்கள் இனிமேல் எதுவும் செய்ய முடியாது. பெண்களைக் கண்டு பா.ஜ., அச்சப்படுகிறது. தேர்தல் ஆணையத்தை மீறி எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

ரத்தக்கறை

கடவுளிடம் ஆணவத்துடன் நடந்து கொண்டால் தண்டிக்கப்படுவர். ஆளும் கட்சியின் விதிமீறல்களை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவே இல்லை. கடந்த முறை என்னை பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை. ஒரு எம்.பி.,யின் குரலை நசுக்கியது. அதற்கு ஆளும் கட்சி பெரும் விலை கொடுத்தது. என்னை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட பா.ஜ., எம்.பி.,க்கள் 63 பேரை பொதுமக்கள் நிரந்தரமாக உட்கார வைத்தனர். மணிப்பூரில் ரத்தக்கறை படிந்துள்ளது. அங்கு பிரதமர் மோடி நேரில் செல்லாதது ஏன்?. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Indragandhi
ஜூலை 02, 2024 23:27

சரியான கேள்வி. ஆட்சியாளர்கள் உணர வேண்டும்


Indragandhi
ஜூலை 02, 2024 23:25

சரியான கேள்வி. பாஜக எல்லா கூத்துகளையும் செய்கிறது. எந்த திறமையும் இல்லாத அலப்பல் நிறைந்த மத்திய அரசு. கடவுள் நிச்சயம் தண்டிப்பார். தேர்தல் ஆணையத்தை ஏமாற்றலாம். ஊடகங்களையும் ஏமாற்றலாம்.


புவனேஷ்
ஜூலை 02, 2024 08:26

பிரிட்டிஷ் ராணி மாதிரிதை காப்பியடிச்சு இங்கே ஒரு ஆளுக்கு ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மாளிகை, ஜனாதிபதி ந்னு பேரு வேற. 500 சஸ்தானங்களை ஒழித்து மக்களாட்சியை நிறுவிய பிறகு செங்கோலுக்கு கைத்தடி.மரியாதை தான்னு சொல்லிய நேரு எங்கே? இல்லை.. இல்லை. மன்னராட்சி மாதிரி கொண்டாருவோம்னு கைத்தடியை செங்கோலாக்கி மன்னராட்சியை நினைவு படுத்தும் இவர்கள் எங்கே?


Krishna Moorthy
ஜூலை 02, 2024 08:26

மக்கள் தொண்டு செய்ய சம்பளம், பென்ஷன் எதற்கு? பதில் உண்டா?


கண்ணன்
ஜூலை 02, 2024 06:52

ஜனநாயக நாட்டில் மமதாவின் ஆட்சி எதற்கு?


Kesavan
ஜூலை 02, 2024 05:24

சரியான கருத்து


தாமரை மலர்கிறது
ஜூலை 02, 2024 04:03

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்பதை போன்று செங்கோலின் அருமை இந்த தற்குறிக்கு தெரியாது.


Kumar
ஜூலை 02, 2024 02:44

இதையே போய் ராகுல் காந்தியிடம் கேள். அவருடைய தாத்தா எதற்காக முதன்முதலில் வாங்கினார் என்று. நேரு இறந்தபின் அதை எதற்கு கொண்டு போய் வேறு இடத்தில ஏன் காங்கிரஸ் கட்சி கொண்டுபோய் வைத்தது என்று.. உன்னை எல்லாம் மக்கள் தேர்ந்து இங்கு அணுப்பியுள்ளார்களே


RAJ
ஜூலை 02, 2024 01:41

ஏன்மா EVM பத்தி பேசல? கப்புனு கம்போட்டு ஒட்டிக்கிட்டு கீரிங்கோ..


RAJ
ஜூலை 02, 2024 01:25

உனக்கு எல்லாம் செங்கோலப்பத்தி பேசறே என்ன தகுதி இருக்கு? அது தமிழ்நாட்டின் மாண்பு ... மூடர்களுக்கும் .. தமிழின துரோகிகளுக்கும் புரியாது .. 40 பேரும் வாயில வடை வச்சுக்கிட்டு இருந்திங்க.. ஈனப்பிறவிகளே. .. இதுல குருமா,,, வைகோவின் புதல்வன் வையாபுரி வேற. .. அண்ட் கேன்டீன் பாய்ஸ் .. .


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி