உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

காங்., அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

லக்னோ: லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது, குடும்பத் தலைவிக்கு ஆண்டுதோறும் தலா 1 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்த நிலையில், உத்தர பிரதேசத்தில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தை நேற்று ஏராளமான பெண்கள் முற்றுகையிட்டனர்.மத்தியில், இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால், குடும்பத்தலைவிக்கு ஆண்டுதோறும் தலா 1 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என, காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. அக்கட்சி தாங்கள் அறிவித்த வாக்குறுதிகளை, உத்தரவாத அட்டைகளாகவும் தொகுதி மக்களுக்கு அளித்தனர்.தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு நேற்று ஏராளமான பெண்கள், காங்கிரஸ் அளித்த உத்தரவாத அட்டைகளுடன் வந்தனர். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும்படி கோஷமிட்டனர். இதனால், அதிர்ச்சி அடைந்த காங்கிரசார், முற்றுகையிட்ட பெண்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்