உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று கூடுகிறது யமுனை நதி வாரியம்

இன்று கூடுகிறது யமுனை நதி வாரியம்

புதுடில்லி:டில்லிக்கு தருவதற்கு உபரி தண்ணீர் தன்னிடம் இல்லையென, உச்ச நீதிமன்றத்தில் ஹிமாச்சல பிரதேச அரசு நேற்று கூறியது. இதைத் தொடர்ந்து மனிதாபிமான அடிப்படையில் தண்ணீர் தேவையெனில், யமுனை நதி வாரியத்தை அணுகும்படி, டில்லி அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.இதுகுறித்து முடிவு செய்ய யமுனை நதி நீர் வாரியத்தின் கூட்டம் இன்று டில்லியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த விவகாரத்தில் வாரியம் விரைவாக முடிவெடுக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் கூறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்