உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எடியூரப்பா 130 கிலோ நாணயங்கள் வழங்கல்

எடியூரப்பா 130 கிலோ நாணயங்கள் வழங்கல்

தட்சிண கன்னடா, ஜூன் 25-குக்கே சுப்பிரமணியா கோவிலில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, 130 கிலோ எடை கொண்ட நாணயங்களை துலாபாரமாக செலுத்தினார்.பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா, இரண்டு நாட்களாக சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் தட்சிண கன்னடா மாவட்டம், பெல்தங்கடியில் உள்ள தர்மஸ்தலா சென்றார். அங்கு இரவில் தங்கிய அவர், நேற்று காலை மஞ்சுநாதேஸ்வரா சுவாமியை தரிசனம் செய்தார். பின், அங்கிருந்து, குக்கே சுப்பிரமணியா கோவிலுக்கு சென்றார். அவரை, சுள்ளியா பா.ஜ., -- எம்.எல்.ஏ., பாகிரதி மாருல்யா, பெல்தங்கடி எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா, முன்னாள் அமைச்சர் அங்கார் உட்பட ஏராளமான தொண்டர்கள் வரவேற்றனர். பின், கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலில், கோவிலுக்கு சென்று, சங்கல்பம் செய்தார். அதன் பின், அவருடைய வேண்டுதல் நிறைவேறியதாகக் கூறி, 130 கிலோ நாணயங்களை துலாபாரமாக செலுத்தினார். அங்கேயே அன்னதானம் சாப்பிட்டார்.இதன் பின், துணை முதல்வர் சிவகுமார், குக்கே சுப்பிரமணியா கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். அவரை காங்கிரஸ் பிரமுகர்களை வரவேற்றனர். கோவில் சார்பில் வரவேற்று அழைத்துச் சென்றனர்.இரண்டு முக்கிய பிரமுகர்கள் அடுத்தடுத்து வந்ததால், இரு கட்சி தொண்டர்களும் உற்சாகத்தில் திளைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வாய்மையே வெல்லும்
ஜூலை 01, 2024 08:45

துலாபார கதை சாராம்சம் மசாலா படம் தொர்த்துவிடும் போல இருக்க வாய்ப்பு உண்டு.. எடியூரப்பா வேண்டுதலுக்கும் காங்கிரஸ்க்கும் என்ன கனெக்ஷன் ?


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி