உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பையில் இளம் பெண்ணை கொலை செய்து புதரில் வீச்சு

மும்பையில் இளம் பெண்ணை கொலை செய்து புதரில் வீச்சு

மும்பை: மும்பையில் 20 வயது இளம் பெண் கொடூரராக கொலை செய்யப்பட்டு புதரில் வீசிச்சென்ற சம்பவம் நடந்துள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை யூரான் நிலையம் அருகே புதரில் இளம் பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த போலீசார் புதரிலிருந்து சடலத்தை மீட்டனர். அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தது.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தியதில் கொலையான இளம் பெண் மும்பை பிலாப்பூரைச் சேர்ந்த யாஷ்ஸ்ரீ ஷிண்டே என்பதும் தெரியவந்தது.இவரை அவரது காதலன் தான் கொலை செய்து புதரில் வீசிச்சென்றுள்ளது தெரியவந்தது. அவரை தேடி வருகின்றனர்.ரயில் நிலையத்தில் சிசிடிவி காட்சி பதிவுகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

A P
ஜூலை 27, 2024 20:52

சினிமாவைப் பார்த்து அதைப்போல காதல் செய்கிறேன் என்று ஒழுக்கம் கெட்ட முறையில் பெண்களிடம் நடந்து கொள்வது ஈன தனமே அன்றி வேறெதுவும் இல்லை. ஒரே தந்தைக்குப் பிறந்த எவனும் இது போன்று காதலை கொச்சைப் படுத்தி சினிமா எடுக்க மாட்டான். அதே போல அதனைப் பார்த்து காதலிக்கிறேன் என்று கிளம்பி காலித்தனமாக நடந்து கொள்பவனும் ஒரே தந்தைக்குப் பிறந்தவன் இல்லை. தந்தை பெயர் தெரியாதவன் தான் இது போன்ற கேடுகெட்ட செயல்களில் ஈடு படுவான். இவனுக்கெல்லாம் அரேபியா தான் சரியான நாடு.


Palanisamy Sekar
ஜூலை 27, 2024 20:06

காதல் கத்தரிக்காய் எல்லாம் இந்த காலத்தில் யுவதிகளுக்கு இளைஞர்களுக்கும் பீடித்த வியாதியை போன்றது. காதல் செய்யாவிடில் தலைவெடித்து செத்துவிடுவார்கள் போல. ஒழுக்கமும் உணவுப்பழக்கமும் தலைகீழாய் ஆனபோதே இந்த கொலைகள் விவாகரத்துகள் தலைதூக்க ஆரம்பித்தன. பெற்றோருக்கு உரிய மரியாதையை கொடுப்பதில்லை. தலைக்கனம் சம்பாதிக்கின்றோம் என்று. சமூகத்தில் வறட்டு கவுரவத்துக்கு ஆட்பட்டு புலீயை பார்த்து சூடுபோட்ட பூனைகளை போல செல்வந்தர் போல மனதில் எண்ணிக்கொண்டு மேற்கத்திய கலாச்சாரம் என்று எண்ணிக்கொண்டு வாழ்க்கையை தொலைத்து தற்போது உயிரையையும் தொலைத்துவருகின்றார்கள். இதுபோல நாடெங்கும் பல இடங்களில் கொலைகளும் தற்கொலைகளும் சர்வ சாதாரணமாக நடைபெறுவது கலிகாலத்தில் உச்சம் தான். ஆழ்ந்த அனுதாபங்கள்


மேலும் செய்திகள்