உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியலில் இளைஞர்கள்; ஆம் ஆத்மி எம்.பி.,க்கு ஆசை!

அரசியலில் இளைஞர்கள்; ஆம் ஆத்மி எம்.பி.,க்கு ஆசை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபடுவதற்கு இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்' என, 35 வயதான ஆம்ஆத்மி எம்.பி., ராகவ் சத்தா தெரிவித்தார்.லோக்சபா எம்.பி.,ஆக குறைந்தபட்ச வயது 25 ஆகவும், ராஜ்யசபா எம்.பி.,யாக குறைந்தபட்ச வயது 30ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராஜ்யசபாவில், ஆம்ஆத்மி எம்.பி., ராகவ் சத்தா பேசியதாவது: இந்தியாவில் தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயதை 25 வயதிலிருந்து 21 ஆக குறைக்க வேண்டும். புதிய அரசை தேர்ந்தெடுக்க மக்கள் 18 வயதிலேயே ஓட்டளிக்க முடியும் என்றால், 21 வயதில் தேர்தலிலும் போட்டியிடலாம்.

இளமையான நாடு

நாம் நாடு இளமையான நாடுகளில் ஒன்று. வயதான அரசியல்வாதிகளை கொண்ட இளம்நாடாக இருக்கிறோம். மாறாக இளம் அரசியல்வாதிகளைக் கொண்ட நாடாக நாம் மாற வேண்டும். இதற்கு இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபடுவதற்கு, இளைஞர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

rama adhavan
ஆக 01, 2024 19:28

அப்போ நீ அரசியலில் இருந்து விலகி வழி விடு. உன் 55 வயது தலைவனும் கூட


Swaminathan L
ஆக 01, 2024 18:16

இதெல்லாம் வெற்றுப் பேச்சு. ஆம் ஆத்மி கட்சியில் எத்தனை இருபத்தைந்து வயது இளைஞர்களுக்கு சட்டசபை, மக்களவை உறுப்பினர் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது?


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ