உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரை கதிகலங்க வைக்கும் மறதி நோய்: அதிகம் பேர் பாதிப்பு

காஷ்மீரை கதிகலங்க வைக்கும் மறதி நோய்: அதிகம் பேர் பாதிப்பு

ஜம்மு: காஷ்மீரில் வயதான முதியோர்கள் பலருக்கு அல்சைமர் என்ற மறதி நோய் அதிகம் பாதிக்கப்படுவதாக ஒரு விவர அறிக்கை தெரிவிக்கிறது. காஷ்மீரில் பல மாவட்டங்களில் 55 வயதுக்கு மேற்பட்டோரை அல்சைமர் நோய் பாதிப்பதால் பலரும் மருத்துவமைனயில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறிப்பாக முதியோர்களில் 11 சதவீதம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10ல் ஒருவருக்கு இந்த நோய் உள்ளது. நாட்டில் அல்சைமர் பாதிப்பில் காஷ்மீர் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் உள்ள மொத்த சராசரி பாதிப்பு 7.4 சதவீதம் பேர். ஆனால் காஷ்மீரில் வயதானவர்கள் இதனைவிட பாதிக்கப்படுகின்றனர். டில்லியில் மிக குறைவானவர்களே இந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நினைவாற்றல், சிந்தனை தொடர்பான குறைபாடுகள் வரும். வயதானவர்களை வழக்கமாக பாதிக்கும் நோய்தான் இது. நரம்பியில் தொடர்பானதும் கூட.

அல்சைமர் அறிகுறி என்னவாக இருக்கும் ?

01. சாவி மற்றும் வழக்கமாக தினமும் பயன்படுத்தும் பொருட்களை வைத்த இடத்தை மறந்து விடுவர்.02. இருவர் பேசிக்கொண்டிருக்கும் போது என்ன, என்ன என்று திரும்ப திரும்ப கேள்வி கேட்பர்03. குழப்பமாகவே இருப்பர், முடிவு எடுக்க சிரமப்படுவர் 04. அன்றாடம் செய்யும் வழக்கமான பணிகளை மறந்து விடுவர் 05. கடந்த கால நிகழ்வை மறந்து விடுவர், பிறர் பெயர்கள் மறதி ஏற்படும்.06. மேற்கூறிய விஷயங்கள் அதிகரிக்கும் போது முழு அல்சைமர் நிலைக்கு வந்து விடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

venugopal s
அக் 18, 2024 18:01

அங்கு நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு கூடும் போதே எனக்கு சந்தேகம் வந்தது!


yts
அக் 18, 2024 15:00

தமிழக மக்களையும் தான் வாட்டுகிறது


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
அக் 18, 2024 14:20

அல்சைமருக்கு ஒரே மருந்து தேங்காய் எண்ணெய் தான். தேங்காய் எண்ணெய் உணவில் சேர்த்துக் கொள்வது தேங்காய் உணவில் சேர்த்துக் கொள்வது தேங்காய் எண்ணெய் தலையில் தேய்த்து கொள்வது தேங்காய் சாப்பிடுவது ஏதாவது ஒரு வகையில் தினமும் தேங்காய் எடுத்துக் கொள்வது அல்சைமர் நோய் வராமல் பாதுகாக்கும். நோய் வந்தாலும் குணமாக்கும். இளமை காலத்தில் ஞாபக திறனை அதிகரிக்கும்.


Loganathan Kuttuva
அக் 18, 2024 16:39

அங்கு தேங்காய் கிடைக்காது .


Sivagiri
அக் 18, 2024 14:10

நல்லதுதானே . . . அப்படியே காஷ்மீரை மறந்திட்டு, பாகிஸ்தான் பக்கமா போயிட்டா நல்லதுதானே . . .


Rangarajan Cv
அக் 18, 2024 14:51

Haha


Rasheel
அக் 18, 2024 13:16

காஷ்மீரில் இள வயது அமைதி வழி காரன் எல்லாம் பாகிஸ்தானிய போதை மருந்து வியாபாரத்தில் 5 இல் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


A P
அக் 18, 2024 12:51

ஞாபக மறதி நோய் அப்படீன்னா என்ன என்று நேற்றே கேட்கணும்னு நெனச்சேன். மறந்துட்டேன். ஆனா இப்போது இந்த செய்தி மூலம் அது ஒருவித ஞாபக மரதி சாரி, ஸ்பெல்லிங்கே மறந்துட்டுது ஞாபக மறதி விஷயம் என்று தெரிந்துகொண்டேன்.


ஆரூர் ரங்
அக் 18, 2024 12:45

தமிழகத்தை சரியா செக் பண்ணாம விட்டுட்டாங்க. கூட்டுக் கொள்ளையர்கள் என்றாலும் மறதியால் திராவிஷர்களுக்கே தொடர்ந்து வாக்களிக்கின்றனர். 500 பிளஸ் சரக்கு பிரியாணி செய்யும் வேலை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை