உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயணிகள் ரயில், சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதல்; சத்தீஸ்கரில் 4 பேர் பலி

பயணிகள் ரயில், சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதல்; சத்தீஸ்கரில் 4 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிலாஸ்பூர்: சத்தீஸ்கரில் சரக்கு ரயிலுடன் பயணிகள் ரயில் மோதிய கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.பிலாஸ்பூர் மாவட்டம், ஜெய்ராம் நகர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் லால்காதன் என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. கோர்பா பயணிகள் ரயிலும், அதே வழித்தடத்தில் வந்த சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ahqyb475&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். விபத்தை நேரில் பார்த்தவர்கள் பேசுகையில், முதலில் பலத்த சத்தம் கேட்டது. அதன் பின்னர் பலர் கூக்குரல் இடும் சத்தமும், அலறலும் கேட்டது. உடனே நாங்கள் விபத்து நிகழ்ந்த பகுதிக்குச் சென்றோம் என்றனர்.இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் மோதி விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர், ரயில்வே ஊழியர்களுடன் மருத்துவக் குழுவினரும் சென்றுள்ளனர்.காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். விபத்தில் சிக்கிய பயணிகள் ரயிலில் கூட்டம் நிரம்பி காணப்பட்டதால் பலி எண்ணிக்கை உயரும் என்று தெரிகிறது. மேலும், விபத்து நிகழ்ந்த வழித்தடத்தில் தற்காலிகமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாற்று வழித்தடத்தில் ரயில்களை இயக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

V Venkatachalam, Chennai-87
நவ 04, 2025 18:19

பீகாரில் எலக்ஷன். அதுக்கு முன்னாடி ரயில் விபத்து. சதியாக இருக்கலாம் என்ற சந்தேகம் வருகிறது. பதவி பேராசை பிடித்தவன்கள் ஏவுதல்கள் இருக்கலாம். மோடியையும் அமித்ஷாவையும் பப்ளிக் அரங்கில் வைத்து விளாச இந்த விபத்து முக்கிய பங்கு வகிக்கும். பொது மக்கள் பலியாகினர்.‌அது கூட தேச துரோகிகளுக்கு உரைக்காது. நமக்கு மனசு வலிக்கிறது. அந்த ஆன்மாக்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம்.


Narayanan Muthu
நவ 04, 2025 18:01

எத்தனை விபத்துக்கள் நடந்தாலும் பாஜக அரசு பொருட்படுத்துவதே இல்லை. மக்களின் உயிர் துச்சமாக மதிக்கப்படுகிறது. இத்தனை விபத்துக்கள் நடந்த போதிலும் சிறிது கூட குற்ற உணர்வே இல்லாமல் ரயில் மந்திரி அஷுவினி வைஷ்ணவ் பதவியில் தொடர்வது வெட்கக்கேடு. ரயில்வே மந்திரியாக அவர் இனியும் தொடரவேண்டுமா என ஒன்றிய அரசு யோசிக்க வேண்டும்.


abmgerard gerard
நவ 05, 2025 09:09

மிஸ்ட்கே பை ரயில்வே தேபர்த்மேன்ட்


தென்காசி ராஜா ராஜா
நவ 04, 2025 17:43

பாதுகாப்பு பயணம் ரயில் என்று மாறும்


புதிய வீடியோ