உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இனி 10 மணி நேரம் வேலை: ஆந்திர அரசு முடிவு

இனி 10 மணி நேரம் வேலை: ஆந்திர அரசு முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: ஆந்திராவில் எளிதாக தொழில் செய்யவும், முதலீட்டாளர்களை ஈர்க்கவும் அதிகபட்ச வேலை நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. தொழிலாளர் மற்றும் முதலீட்டாளர்கள் நலன் கருதி, இது தொடர்பான சட்டத்தை திருத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக, தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் பார்த்தசாரதி கூறியதாவது: தொழிலாளர் சட்டங்களைத் முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகத் திருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஆந்திராவுக்கு அதிக முதலீடு வரும். உலக மயமாக்கல் ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்கிறது. உலகளாவிய விதிகளை செயல்படுத்த, இந்த திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.மேலும், இரவு நேரத்திலும் பெண்கள் பாதுகாப்பாக பணியாற்ற ஏதுவாக அமைச்சரவை இரவு நேர வேலை விதிகளையும் தளர்த்தியுள்ளது. இதனால் போக்குவரத்து வசதி, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு போன்ற பாதுகாப்புகளுடன் பெண்கள் வேலை செய்யலாம்.இவ்வாறு பார்த்தசாரதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

சிட்டுக்குருவி
ஜூன் 08, 2025 00:46

10 மணி நேரத்தில்இடைவேளை எவ்வளவு ? ஐரோப்பிய நாடுகளிலெல்லாம் 4 நாள் வேலை பரிசோதனையில் இருக்கின்றது .அதுபோல் 10 மணிநேரம் வேலை என்றால் அதை 4 நாட்கள் வேலைநாளாக்கவேண்டும் .அப்போதுதான் வேலைவாய்ப்பு இழைப்பு ஏற்படாது .


தாமரை மலர்கிறது
ஜூன் 07, 2025 20:55

சூப்பர் திட்டம். சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்துக்கள். ஸ்டாலின் செய்த ஒரே உருப்படியான வேலை பன்னிரண்டு மணிநேர வேலை திட்டம் கொண்டுவந்தார். உடனே சோம்பேறிகள் கூட்டமான கம்யூனிஸ்ட், திருமா, வைகோ போன்றோர் பண்ணிய ஆர்ப்பாட்டத்தால், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.


Ramesh Sargam
ஜூன் 07, 2025 20:32

ஊழல் புரியாமல், லஞ்சம் வாங்காமல், நேர்மையாக எட்டு மணிநேரம் பணிசெய்தாலே போதுமானது.


canchi ravi
ஜூன் 07, 2025 19:16

8 மணி நேரத்திற்கு மேல் சரியல்ல. அதுவும் வாரம் இரு நாள் விடுமுறையுடன்.


GMM
ஜூன் 07, 2025 19:05

தற்போதய உடல் ஆரோக்கியம் கருத்தில் கொண்டு 6 மணி நேர வேலை 4 ஷிப்ட் . 55 வயது வரை உடல் உழைப்பு வேலை. வேலை நேர குறைப்பு போல், சம்பளம் குறைப்பு. மாநில செலவில் குறுகிய கால தேவைக்கு ஏற்ப பயிற்சி கட்டாயம். தொழிலுக்கு ஏற்ப பயிற்சி கொடுக்க வேண்டும். பயிற்சி பெற்றவருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும். ஓய்வுக்கு பின் குறைந்த பென்ஷன். அரசு, நிறுவனம், தொழிலாளி மற்றும் ஒரு வரி விலக்கு பெற்ற தொண்டு நிறுவனம் சம பங்கு செலுத்த வேண்டும்.


m.arunachalam
ஜூன் 07, 2025 17:46

பயண நேரத்தையும் கணக்கிட்டால் இது 13-14 மணிநேரம் ஆகிவிடும் . சிந்தித்து தெளிதல் நலம் .


spr
ஜூன் 07, 2025 17:30

இது மிக்கது தவறான முடிவு தொழிலாளர் நலனுக்கு எதிரானது. அதீத அந்நிய முதலீட்டை ஈர்க்க இப்படிஸ் செய்யவே மத்திய அரசு தொழிலாளர் நாளாகி சட்டங்களைக் கொண்டு வந்தது. இது போல இனியும் பல சட்டங்களைக் கொண்டுவரும் அடுத்து "Hire &Fire" சட்டம் வரும். அதன் முதற்படி தொழிற்சாலை 24 மணி நேரமும் இயங்கட்டும். தொழிலாளர் 8 மணி நேரமே பனி செய்ய, மூன்று கட்டமாகப் பனி செய்யலாமே.அதனால் பலருக்கு வேலை கிடைக்கலாம் அப்படியொன்றும் அதீதமான சம்பளம் தரப்போவதில்லை. கம்யூனுனிஸ்ட் தொழிற்சங்கங்கள் இல்லாமற் போனதன் விளைவே இது. இனி காலநேரம் பாராமல் எல்லோரும் உழைக்க வேண்டுமெனவும் சட்டம் வரும் சீனாவைப் போல உற்பத்தியில், உற்பத்தித் திறனில்,தொழில் நுணுக்கத்தில், அரசு முதலீடுகளில் மாறலாம் ஆனால் அடிமைகளை உருவாக்கக்கூடாது


HoneyBee
ஜூன் 07, 2025 17:14

தவறான முடிவு.


Ravi Balan
ஜூன் 07, 2025 17:09

இதனால் பலன் அடைய போகிறார்கள் முதலாளிகள் மட்டுமே ஏனெனில் தற்போதைய சூழ்நிலையில் உடல் உழைப்பு கொடுப்பவர்களுக்கு சம்பளம் குறைவாகத்தான் இருக்கிறது ஆனால் அவர்களுக்கு வேலை நேரம் அதிகம் இப்போதே சில கம்பெனிகள் 9 மணி நேரம் 10 மணி நேரம் வேலை செய்தால் எட்டு மணி நேரத்திற்கு மட்டுமே சம்பளமாக கொடுக்கிறார்கள் அதனை நியாயப்படுத்த சட்டமாக இயற்றி இருக்கிறார்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவது உடல் உழைப்பு கொடுப்பவர்கள் மட்டுமே காரணம் கேட்டால் சைனாவில் 10 மணி நேர வேலை செய்வதை உதாரணமாக காட்டுவார்கள்.


MURALIDHARAN ARAVAMUDHAN
ஜூன் 07, 2025 19:12

sir you can became owner and get the benefit.


A Venkatachalam
ஜூன் 07, 2025 17:07

ஒரு தொழிலாளி எட்டு மணி நேரம் முழு மனா திருத்தியெடு வேலை செய்தாலே இந்தியா வல்லரசு ஆகிவிடும். சட்டத்தை கொண்டு வரும் வல்லுநர்கள் கொஞ்சம் சிந்தித்து செயல்பட வேண்டும். ஒரு தொழிலாளி அவருடைய பனி ஒய்யு காலம் வரை தன குடும்பத்துக்கும், தான் பனி புரியும் நிறுவனத்துக்கும் நல்லவனாக இருக்க எட்டுமணி நேர பனி ஆகா சிறந்தது. பத்து மணி நேரம் ஒரு நாளைக்கு செய்யலாம், அனால் தொடர்ந்து செய்ய முடியுமா.


மீனவ நண்பன்
ஜூன் 07, 2025 17:41

சீனாவில் தொழிலாளி இந்தியர்கள் செய்யும் வேலையை ரெண்டு அல்லது மூன்று மணி நேரங்களில் செய்து முடிக்கிறார்கள் .மிகவும் தொழில்நுட்பம் வாய்ந்த வேலைகளை ஆர்வத்துடன் செய்கிறார்கள். அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்க ஆர்வத்துடன் வேலை செய்வது தான் உண்மை


புதிய வீடியோ