உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மருத்துவமனை தீ விபத்து; உயர் மட்ட விசாரணைக் குழு அமைத்து அரசு உத்தரவு

மருத்துவமனை தீ விபத்து; உயர் மட்ட விசாரணைக் குழு அமைத்து அரசு உத்தரவு

லக்னோ: மருத்துவமனையில் தீ விபத்தில் குழந்தைகள் 10 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்ய கமிஷனர் மற்றும் டி.ஐ.ஜி., அடங்கிய 2 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.உ.பி., மாநிலம் ஜான்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் பலத்த காயமுற்றனர். இதில் சில குழந்தைகள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவமனையின் வெளியே குழந்தைகளின் பெற்றோர் மன உடைந்து நிற்கும் வீடியோ காட்சிகள் கவலை அடைய செய்கிறது. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது என போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8gdljz81&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்ய கமிஷனர் மற்றும் டி.ஐ.ஜி., அடங்கிய 2 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. 'இந்த நிகழ்வு வேதனை அளிக்கிறது. காயம் அடைந்த குழந்தைகள் விரைவில் குணமடைய ராமரை பிரார்த்தனை செய்கிறேன்' என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

கடும் நடவடிக்கை

மருத்துவமனையில் உ.பி துணை முதல்வர், பிரஜேஷ் பதக் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதிதாக பிறந்த குழந்தைகளின் இறப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து, பிறந்த குழந்தைகளின் உடல்களை அடையாளம் காண முயற்சித்து வருகிறோம். தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்படும்.ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை அறிக்கை வந்த பின் தான் கூற முடியும். 7 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 3 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

நிவாரணம்

தீ விபத்தில் உயிரிழந்த 10 குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்பாவி
நவ 16, 2024 17:39

தேவையானது அடிமட்ட விசாரணை. உயர்மட்டக் குழுன்னா ஓட்டல்ல ரூம் போட்டு சாப்புட்டு ஆராய்ஞ்சு அறிக்கை குடுப்பாங்க. உண்மைத்தன்மை இருக்காது.


Anantharaman Srinivasan
நவ 16, 2024 11:33

உ பி யில் கொஞ்சநாளா மருத்துவமனை விபத்துக்கள் இல்லாமல் இருந்தது. இதோ ஆரம்பித்து விட்டது.


MADHAVAN
நவ 16, 2024 10:28

விரைவில் அந்த பெற்றோர்கள் மனம் ஆறுதலடைய கடவுளிடம் வேண்டுவோம்,


Duruvesan
நவ 16, 2024 10:20

யோகி மற்றும் பிஜேபி ஆட்சி பல் இளிக்கிறது, பேசாம ராஜினாமா செய்யுங்கள்


sribalajitraders
நவ 16, 2024 09:43

யோகி முதலமைச்சர் பதவிக்கு கொஞ்சம் கூட தகுதி இல்லாதவர்


Kalyanaraman
நவ 16, 2024 09:24

மின்சார ஸ்விட்ச் - கேபிள்களில் பலப்பல புதிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டது. இருந்தும், மின் கசிவு ஏற்படுகிறது என்றால் என்ன செய்ய??


MARI KUMAR
நவ 16, 2024 09:00

ஆழ்ந்த இரங்கல்கள்


kantharvan
நவ 16, 2024 08:34

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள் தெய்வ நம்பிக்கை உடையவர்கள் குழந்தைகள் நல மருத்துவமனைகளை நன்றாக பராமரிப்பு செய்யுங்கள் என்று சொன்னால் ஒரு கூட்டம் நம்மை வசை பாடுவார்கள். கலியுகமாம் ராமர் சாமி வேஷம் போட்டவர்களை கூட கும்பிடும் முதலமைச்சர் நிர்வாகம் இப்படித்தான் இருக்கும் .


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 16, 2024 10:12

மர்ம மனிதராக இருப்பதால்தான் இந்த விவகாரத்தில் ஹிந்து ஆன்மிகத்தை இழுத்துப்போட முயற்சி செய்கிறீர்கள் ... அப்போது அதற்குத் தக்க பதிலடித்தான் கிடைக்கும் ..... இறைவனது அடியார்களையும் இறைவனாகக் கருதுதல் என்பது ஹிந்து நம்பிக்கைதான் ..... ஒரு சமூக வலைத்தளத்தில் இஸ்லாமிய அன்பர்கள் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்தனர் .... அதில் கமெண்ட்டும் அவர்களே செய்திருந்தனர் ... அதாவது ராமராக நடித்த ஒருவர் அதே அலங்காரத்துடன் பிச்சை கேட்பது குறித்த கமெண்ட்டில் ராமரே பிச்சை எடுக்கிறார் என்று குறிப்பிட்டனர் ..... ராமராக நடித்தவருக்கும், ராமருக்கும் வித்தியாசம் தெரியாதா இவர்களுக்கு ???? ராமராக நடித்த கலைஞர் வேறு தொழில் அறியாதவராக இருக்கலாம் ... ஆகவே சமய நம்பிக்கை காரணமாக மக்கள் உதவுவார்கள் என்றெண்ணி பிச்சை ஏற்றிருக்கலாம் ... அதை புண்படுத்தும் விதமாக கிண்டல் செய்வதால் யாருக்கு என்ன லாபம் ???? உங்களது மதம் உலகம் முழுவதும் சந்திசிரிக்கிறது .... முதலில் அதிலுள்ள குறைபாடுகளைக் களையுங்கள் .....