உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரிசர்வ் வங்கி அங்கீகாரமின்றி கடன் வழங்கினால் 10 ஆண்டு சிறை

ரிசர்வ் வங்கி அங்கீகாரமின்றி கடன் வழங்கினால் 10 ஆண்டு சிறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அங்கீகாரமின்றி செயல்படும் கடன் வழங்கும் நிறுவனங்கள், தனி நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள கடன் நடவடிக்கைகளை தடை செய்யும் மசோதா குறித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.நாடு முழுதும் உரிய அங்கீகாரம் இன்றி செயல்படும் கடன் வழங்கும் நிறுவனங்கள், தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, பணிக் குழு ஒன்றை இந்திய ரிசர்வ் வங்கி நியமித்தது. அந்த குழு தாக்கல் செய்த அறிக்கையில், உரிய அங்கீகாரமின்றி கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.இந்நிலையில், கடன் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் விதமாக, 'பியுலா' எனப்படும் ஒழுங்கற்ற கடன் நடவடிக்கைகளை தடை செய்தல் மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துஉள்ளது. இந்த மசோதா தொடர்பான பொதுமக்களின் கருத்துகள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ள மத்திய அரசு, அதை அடுத்த ஆண்டு பிப்ரவரி 13ம் தேதிக்குள் அனுப்பலாம் என கால அவகாசம் நிர்ணயித்துள்ளது.

மசோதாவில் என்ன இருக்கு?

வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: ரிசர்வ் வங்கி அல்லது ஒழுங்குமுறை அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படாத நபரோ அல்லது நிறுவனமோ, பொது கடன் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இந்த மசோதா தடை செய்கிறது. உரிய அங்கீகாரம் இன்றி செயல்படும் தனி நபர் அல்லது நிதி நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். அதேசமயம், அங்கீகாரமின்றி கடன் வழங்குபவர்களுக்கு 2 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். டிஜிட்டல் முறையிலோ அல்லது வேறு வழியிலோ பணத்தை கடனாக கொடுத்து, கடன் வாங்குபவர்களை துன்புறுத்தினாலோ அல்லது கடன்களை மீட்க சட்டவிரோத வழிகளை பயன்படுத்தினாலோ, மூன்று முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். கடன் வழங்குபவர், கடன் வாங்குபவர் அல்லது அது தொடர்பான சொத்து ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களிலோ அல்லது நம் நாட்டிற்கு வெளியே அமைந்திருந்தாலோ, அது தொடர்பான விசாரணை சி.பி.ஐ., அமைப்பிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

P G Sundarrajan
டிச 21, 2024 05:58

எந்த தனியார் நிறுவனமோ அல்லது தனிப்பட்ட மனிதரோ கொடுக்கும் கடனுக்கு உண்டான வட்டி விகிதத்தை ரிசர்வ வங்கி நிர்ணயிக்க வேண்டும். அந்த வட்டி விகிதம் வங்கியின் வட்டி விகிதத்தை விட 2 அல்லது 3 சதவிகிதம் மட்டுமே அதிகமாக இருக்கலாம் என்றும், வட்டி விகிதத்திற்கு உச்ச வரம்பு நிர்ணயிக்க படவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக கடன் பரிவர்த்தனை வங்கிகளின் மூலமாகவே இருக்கவேண்டும் என்று சட்டம் இயற்றவேண்டும். ரொக்க பண பரிவர்த்தனை குறித்த எந்த வழக்கும் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்படாது என்ற சட்டம் வரவேண்டும். இதற்கு வழி செய்யும் விதமாக ரூ 100 கு மேல் கரன்சி இல்லை என்ற நிலை வரவேண்டும். வாங்கிய கடனை திருப்பி தரும் வசதியை சரிபார்த்த பின்னார்த்தான் கடன் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் வரவேண்டும். ஒவ்வொரு கடன் பற்றியும் ரிசர்வ வங்கியில் தெரிவித்து ஒரு பதிவு எண் பெறவேண்டும். கதுவாட்டியை கிரிமினல் குற்றமாக அறிவிக்கவேண்டும்.


Udhayakumar
டிச 21, 2024 06:31

வரவேற்க்கிறேன் கடன் வழங்கும் கம்பெனிகள் சட்ட படி கட்டுப்படுத்த வேண்டும்


அப்பாவி
டிச 20, 2024 17:03

குடுக்குற கடனுக்கு 18 பர்சண்ட் ஜி.எஸ்.டி கடுனா நோ ப்ராப்ளம்.


RAMAKRISHNAN NATESAN
டிச 20, 2024 13:36

கடுமையா அமல்படுத்துங்க ..... இதுல பொதுமக்களிடம் கேட்க என்ன இருக்கு ???? ஓ, பொதுமக்கள் என்கிற போர்வையில் அரசியல்வியாதிகளின் கருத்துக்காக வெயிட் பண்றீங்களோ ????


V RAMASWAMY
டிச 20, 2024 12:53

இந்தக் கட்டுப்பாடு சினிமா தயாரிப்பாளர்களுக்கு கந்து வட்டியில் கோடி கோடியாக கடன் கொடுப்பவர்களை ஓரளவு பாதிக்கும். இதற்கு ரிசர்வ் வங்கி தேசிய வங்கிகளிடமிருந்து சினிமா தயாரிப்பாளர்களுக்கு அதற்கென கட்டுப்பாடுகளுடன் தக்க பாதுகாப்பு செக்யூரிட்டி இருந்தால் கந்து வட்டியை விட குறைந்த வட்டிக்கு கடன் கொடுத்தால் மிக நல்லது. அதே மாதிரி கந்து வட்டியால் பாதிக்கப்படும் பல ஏழைகளுக்கும் குறைந்த வட்டியில் வங்கிகள் மூலம் கடன் கொடுக்கலாம்.


Dharmavaan
டிச 20, 2024 10:18

இந்த கட்டுப்பாடுகளால் ஏவனும் கடன் கொடுக்க மாட்டான் .கடனை வசூலிக்க எந்தவித குரூகிய கால /நேர்மையான/ பாதுகாப்பான வழிமுறை இல்லாத பொது இது பெரும்பான்மையினரை பாதிக்கும் அவசரத்திற்கு கடன் கிடைக்காது


GMM
டிச 20, 2024 08:35

மத்திய அங்கீகாரம் இல்லாமல் கடன் வழங்குவது /தள்ளுபடி செய்வது குற்றம். தண்டனை வழங்க வேண்டும். இது ஊழல், சட்டவிரோத பண சுழற்சி. அங்கீகாரம் பெற்று கடனில் அதிக பங்கு திரும்ப பெறவில்லை என்றாலும் குற்றம். அரசு நடவடிக்கை முடிவுக்கு பின் தான் அட்வகேட் தலையிட வேண்டும். தேச விரோத, பொருளாதார குற்றங்களில் நீதிமன்றம் தலையீடு வரைமுறை படுத்த வேண்டும்.


Samy
டிச 20, 2024 08:15

கடன் தேவைப்படுவோர்க்கு யார் கொடுப்பர்


சாண்டில்யன்
டிச 20, 2024 09:18

ரொம்ப சிம்பிள் நமக்கு ஒரு லக்ஷம் கடன் தேவை என்றால் நாம் ரிசர்வ் வங்கியில் போய் மனு போட வேண்டும் அவர்கள் நம்ம யோக்கியதையை தீர விசாரித்த பின் அனுமதித்தால் எந்த வங்கியும் நமக்கு கடன் வழங்குமாம் அவ்வளவுதான்


Oru Indiyan
டிச 20, 2024 08:13

விதம் விதமான கடன்கள் கொடுக்கப்படுகிறது.. வாங்கப்படுகிறது. தினசரி வியாபாரிகள் முதல் சினிமா தயாரிப்பாளர் வரை. தனியார் கொடுக்கும் கடன் பல லட்சம் கோடிகள். தடுக்க ரொம்ப கஷ்டம்.


அப்பாவி
டிச 20, 2024 07:34

எனக்கு மளிகைக் கடையில் மாசா மாசம் கடனுக்கு பொருள்தராங்க. அவிங்களுக்கு பதில் நீங்களே குடுங்க எசமான்.


Kasimani Baskaran
டிச 20, 2024 07:07

கந்து வட்டி நிறுவனங்களை முழுவதுமாக குழிதோண்டி புதைக்க வேண்டும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதே சமயம் வராக்கடன் என்று தெரிந்தும் கமிஷனுக்கு கடன் கொடுத்து வங்கிகளை திவாலாக்க முயலும் நடைமுறைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த தொழில் நுணுக்கத்தில் கொட்டை போட்ட சிதம்பரம் போன்ற மேதைகளுடன் கலந்தாலோசித்து ஒரு முடிவை எட்ட வேண்டும்.


சாண்டில்யன்
டிச 20, 2024 11:33

அவனுங்களுக்கு ஆதரவாதானே இந்த நெருக்கடியெல்லாம் கொண்டு வராரு மோடி என் கடனைப்போல் இரண்டு மடங்கு தொகையை என் சொத்திலிருந்து எடுத்து விட்டார்கள் என்று விஜய் மல்லையா சொல்லியிருக்கிறாரே நீரவ் மோடி கணக்கை இவரிடம் சேர்த்து விட்டார்களோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை