உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரள அரசு பஸ்கள் தள்ளாடுது ! மது அருந்திய டிரைவர்கள் டிஸ்மிஸ் !

கேரள அரசு பஸ்கள் தள்ளாடுது ! மது அருந்திய டிரைவர்கள் டிஸ்மிஸ் !

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் மது அருந்தி விட்டு அரசு பஸ் ஓட்டிய டிரைவர்கள், நடத்துனர்கள் பலர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். கேரள மாநிலத்தில் குடிப்பழக்கம் அதிகரித்து வருகிறது. இதில் கேரள அரசு பஸ்களில் டிரைவர்கள் மது அருந்தி பணிக்கு வருவதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் உத்தரவின்படி அரசு பஸ்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த ஒரு வாரத்தில் நடந்த சோதனையில் 100 பேர் சிக்கினர். இதில் டிரைவர்கள், நடத்துனர்கள் மது அருந்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நிரந்தர பணியாளர்களான 74 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தற்காலிக பணியாளர்கள் 26 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தற்போது கேரளாவில் பரபரப்பாக பேசப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sivaraman
ஏப் 18, 2024 13:20

அரசு கஜானாவும் தள்ளாடுது


R Sathiyanarayanan
ஏப் 18, 2024 12:03

போகும் வழியில் இறங்கி ஊற்றிக்கொண்டு தொடர்ந்தால் எப்படி கண்டறிவது ?


GMM
ஏப் 18, 2024 11:41

கேரளா கம்யூனிஸ்ட் அரசு பஸ்ஸில் நடத்துனர், டிரைவர் மது அருந்திய நிலையில் பணி புரிந்தவர் மீது போலீசார் நடவடிக்கை அரசு இடங்களில் முன் அனுமதி இல்லாமல், போலீசார் சோதனை செய்ய அதிகாரம் இல்லை? போலீஸாரை போக்குவரத்து துறை செயலர் சஸ்பெண்ட் செய்ய முடியும் மது அருந்தி பயணம் செய்யும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? இது ஒரு போலி / விளம்பர நடவடிக்கை குடிபோதையில் கவுன்சிலர் முதல் மந்திரி வரை இருப்பதை காண முடியும் முதலில் மதுவிலக்கு அமுல் படுத்துக


Nallavan
ஏப் 18, 2024 11:32

தவறு என்பது தவறி செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது தவறு செய்தவன் திருந்த பார்க்கணும் தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்


கல்யாணராமன் சு.
ஏப் 18, 2024 11:32

விமான பயணத்துக்கு முன்னர், விமானிகளுக்கு alcohol சோதனை செய்வதுபோல், பேருந்து ஓட்டுநர்களுக்கும் இனிமேல் செய்ய வேண்டும் போலிருக்கிறது இந்த கேரள மாடலை சோதனை செய்வதல்ல திராவிட மாடலும் பின்பற்றுமா ?? தமிழகம் முதலிடத்திற்கு முன்னேற வேண்டுமென்றால் இதுதான் ஒரே வழி


அசோகன்
ஏப் 18, 2024 11:20

இவங்கதான் இந்தியாவை காப்பாத்த போறாங்களாம்..


ديفيد رافائيل
ஏப் 18, 2024 11:17

Kerala KSRTC best


ديفيد رافائيل
ஏப் 18, 2024 11:16

TNSTC ல இப்படி பண்ண மாட்டாங்க அதான் கொடுமையே


Ramesh Sargam
ஏப் 18, 2024 11:13

பஸ்ஸுக்கு பெட்ரோல் போட்டு பஸ்ஸை ஓட்டு என்றால், அவன் அவனுக்கு பெட்ரோல் சரக்கு போட்டு ஓட்டறான் இது தமிழகத்தில் சகஜம் ஓட்டுனர்கள் வசதிக்காக பஸ் நிலையங்கள் அருகே டாஸ்மாக் கடைகள் அமைத்து கொடுத்திருக்கிறார் தமிழக தானை தலைவர், முதல்வர் ஸ்டாலின் அவர்கள்


மேலும் செய்திகள்