உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 11 வயது சிறுமியின் கருவை கலைக்க அனுமதி மறுப்பு

11 வயது சிறுமியின் கருவை கலைக்க அனுமதி மறுப்பு

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில், 11 வயது சிறுமியின் வயிற்றில் வளரும், 31 வார கருவை கலைக்க அம்மாநில உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.ராஜஸ்தானைச் சேர்ந்த 11 வயது சிறுமி, அவரது தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், தாய் மாமன் வீட்டில் வளர்க்கப்பட்டார்.இந்நிலையில், அந்த சிறுமி 31 வார கர்ப்பமாக உள்ளார். கருவை கலைக்க அனுமதி கோரி, சிறுமியின் தாய்மாமன், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சிறுமியின் உடல் நிலையை மருத்துவக்குழு பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்தது.அதில், சிறுமியின் உடல்நிலை பலவீனமாக இருப்பதால் கருக்கலைப்பு செய்வது அவரது உயிருக்கு ஆபத்தாக முடிய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், கரு 31 வாரம் வளர்ந்துவிட்டதால், கருக்கலைப்பின் போது, குறைமாத குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாகவும், இது குழந்தைக்கு நரம்பியல் பாதிப்பை ஏற்படுத்தி வாழ்நாள் முழுதும் வலியை உண்டாக்க கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து, கருக்கலைப்பு செய்ய அனுமதி மறுத்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறுமி 18 வயதாகும் வரை அவரை காப்பகத்தில் வைத்து பராமரிக்கவும், பிறக்கும் குழந்தையை தத்துக் கொடுக்க ஏற்பாடுகள் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

rsudarsan lic
ஜன 22, 2024 13:46

Wrong judgement.


RAMAKRISHNAN NATESAN
ஜன 22, 2024 08:00

இது போன்ற செய்திகளை படிக்க நேர்ந்தால் மனம் கனக்கிறது ......... மூன்றாம் உலக நாடு என்கிற பெயருக்கு முற்றிலும் பொருத்தமான நாடுதானோ என்கிற சந்தேகம் எழுகிறது .....


அப்புசாமி
ஜன 22, 2024 07:56

அந்த சிறுமிக்கு நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணிக்.குடுக்க ஏற்பாடு செய்யவும்.


Kasimani Baskaran
ஜன 22, 2024 05:39

தாய் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருப்பதால் குடும்பத்துக்குள் (தந்தையின் மூலம்) உறவில் உருவான குழந்தையும் கூட அதிகபாதிப்புள்ளதாக இருக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது. இது போன்ற பூமிக்கே பாரமான தந்தைகளை புலிக்கோ அல்லது சிங்கத்துக்கோ நேரடி உணவாக கொடுத்து விடலாம்


Ramesh Sargam
ஜன 22, 2024 07:19

உணவாக கொடுக்கலாம். ஆனால் அந்த கொடியவர்கள் உடலை தின்று அந்த நல்ல மிருகங்கள் கெட்ட மிருகங்களாக மாறும். பரவாயில்லையா??


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை