உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு; 117 கி.மீ., வர்த்தக வழித்தட திட்டத்துக்கு ஒப்புதல்

பெங்களூரு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு; 117 கி.மீ., வர்த்தக வழித்தட திட்டத்துக்கு ஒப்புதல்

பெங்களூரு: கர்நாடகாவின் பெங்களூரில், போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், 117 கி.மீ., துாரமுள்ள பெங்களூரு வர்த்தக வழித்தடத் திட்டத்துக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரில், போக்குவரத்து நெரிசல் என்பது தீராத பிரச்னை. பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் கூட, போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. பல்வேறு பிரச்னை பெங்களூரையும், போக்குவரத்து நெரிசலையும் பிரிக்க முடியாத ஒன்று என்றே சொல்லலாம். இந்த பிரச்னையால் பல ஐ.டி., நிறுவனங்களும் வேறு மாநிலங்களுக்கு இடம் மாறப்போவதாக கூறப்படுகிறது. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, 'ரிங் ரோடு' எனப்படும், புற சுற்றுச்சாலை திட்டத்தை அமல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்தது. எனினும், பல்வேறு பிரச்னைகளால் இத்திட்டம் கைவிடப்பட்டது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இத்திட்டத்தின் பெயர், 'பெங்களூரு வர்த்தக வழித்தடத் திட்டம்' என மாற்றப்பட்டது. முதல்வர் சித்த ராமையா தலைமையில், சமீபத்தில் நடந்த மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், 117 கி.மீ., துாரமுள்ள பெங்களூரு வர்த்தக வழித்தடத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை, 40 சதவீதம் வரை குறைக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட உ ள்ள இத்திட்டத்தை, இரு ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டம், ஆறு வழித்தட பிரதான சாலைகளுடன், இரு புறமும் இரு அணுகு சாலைகளை கொண்டிருக்கும். எதிர்கால மெட்ரோ ரயில் பாதைக்காக தனியாக இடமும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இழப்பீடு

இதற்காக, 67 கிராமங்களில், 4,000 விவசாயிகளிடம் இருந்து மொத்தம், 2,560 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தை பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் செயல்படுத்துகிறது. முதலில், 27,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்ட இத்திட்டத்தின் செலவு, நிலத்திற்கு பதிலாக வேறு விதமான இழப்பீடுகளை விவசாயிகள் தேர்ந்தெடுப்பதால், 10,000 கோடி ரூபாயாக குறையும் என, எதிர் பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Vijay Kumar
அக் 20, 2025 07:58

பெங்களூரு நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் .இந்த திட்டம் விரைவில் அமல் படுத்தவேண்டும். அணைத்து பிரதான சாலைகளை இணைதலே போக்குவரத்துக்கு நெரிசல் குறைந்துவிடும் உதாரணம் ஓசூர் ரோடு , பன்னேரகாட்ட ரோடு , கனகபுர ரோடு மைசூர் ரோடு , மகாடி ரோடு , தும்கூர் ரோடு, ஏர்போர்ட் ரோடு ,ஓல்ட் மெட்ராஸ் ரோடு இவை அணைத்து ரோடுகலை இணைத்தலே போதும் நகரத்தில் 60% போக்குவரத்துக்கு நெரிசல் குறைந்துவிடும்.


Tskamaraj
அக் 20, 2025 00:00

திட்டம் எதுவாயினும் அதற்க்கான செலவினங்கள் அதை ஈடுசெய்ய அது ஒருபுறம்.. பயனாளிகள் பயன்பாடுகள் தீர்வு என வரிசையாக அணுகுவது முறை அரசு உள் கட்டமைப்புகள் பிரச்சினைகளை தீர்க்க உதவும் கருவியாகும்.. இதையும் ஜனரஞ்சகமான வகையில் மடைமாற்றி நேரம் பணம் பயனாளிகள் இழப்பு இல்லாமல் லாபமுடையதாக உருவாக்க வேண்டும் நேரம் பணம் விரயமானால் தனிமனிதன் லாபகரமாக வழியையே தேர்ந்தெடுப்பார்கள்.. கட்டமைப்புகள் ஐ உபயோகிக்க எளிய +சுலபமாக=லாபமானதாக இருக்க வேண்டியதே சிறந்த தீர்வு கிடைக்கும்..


V RAMASWAMY
அக் 18, 2025 10:20

எந்த திட்டமானாலும் அத்திட்ட வல்லுநர்களை அணுகி அவர்கள் ஆலோசனைகளை செயல் படுத்தினால்தான் நன்மை பயக்கும். அரசியல் காரணங்களுக்காக வல்லுனர்களிடம் ஆலோசனை கேட்காமல் போடும் திட்டங்கள் சரியான முறையில் அமைவதில்லை.


ashok kumar R
அக் 18, 2025 09:51

ஆதியில் இருந்தே தொளை நோக்கு திட்டம் இல்லாத பெங்களூரு அரசு.


ஆரூர் ரங்
அக் 18, 2025 08:27

விவசாய நிலத்தைப் பிடுங்கி பெரும் வணிகர்களுக்கு அளிப்பது கொள்கையா?. முதலாளித்துவ காங்கிரஸ் சாதனையா?


duruvasar
அக் 18, 2025 08:16

நாங்க இந்த மாதிரியான கட்டமைப்பை சென்னைக்கு உருவாகிவதில் தேர்ச்சி பெற்ற ஆஸ்திரேலியா நிறுவனமிடம் பேச்சு வார்த்தை நடத்த வரும் ஜனவரி மாதம் வல்லுநர் குழுவுடன் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படவிருக்கிறது. மேலும் இதன் சாத்தியக்கூறு பற்றி ஆலோசனை வழங்க ஒரு நபர் கமிஷனும் அமைக்கப்படவிருக்கிறது.


VENKATASUBRAMANIAN
அக் 18, 2025 08:10

இது வேலைக்கு ஆகாது. ரயில் திட்டத்தை துரிதப்படுத்தினாலே பாதி பிரச்னை தீரும். எல்லாவற்றிலும் தாமதம்


Kasimani Baskaran
அக் 18, 2025 05:14

மாநில அரசு மாடல் அரசு போல செயல்பட்டால் வேலைக்கு ஆகாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை