மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago
ஹாசன்: ஹாசன் பேலுார் நந்தகொண்டனஹள்ளி கிராமத்தில், அரசுக்கு சொந்தமான நிலத்தில் 126 மரங்களை வெட்டியதாக, மைசூரு பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹாவின் சகோதரர் விக்ரம் சிம்ஹா மீது, குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலத்தை ஜெயம்மா என்பவரிடம் இருந்து, விவசாயம் செய்ய குத்தகைக்கு வாங்கியதாகவும், அரசு நிலம் என்று தெரியாது என, கூறி இருந்தார்.நேற்று முன்தினம் இரவு விக்ரம் சிம்ஹாவை, பெங்களூரில் வனத்துறையினர் கைது செய்தனர். ஹாசனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். நேற்று காலை அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.இதற்கிடையில் விக்ரம் சிம்ஹாவுக்கு ஜாமின் கேட்டு, ஹாசன் நீதிபதி வீட்டிற்கே சென்று, அவரது வக்கீல்கள் சந்திரேகவுடா, தர்மேகவுடா மனு செய்தனர்.நேற்று மாலையில் நீதிபதி வீட்டில் வைத்தே, விசாரணை நடந்தது. தங்கள் மனுதாரர், சம்பந்தப்பட்ட நிலத்தை, குத்தகைக்கு மட்டுமே எடுத்து இருப்பதாகவும், மரங்கள் வெட்டப்பட்டது குறித்து, அவருக்கு தெரியாது என்று வாதிட்டனர். அவரது உடல்நலக்குறைவை காரணம் காட்டி, ஜாமின் கேட்டனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
6 hour(s) ago | 2
12 hour(s) ago