உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பசு கடத்துவதாக நினைத்து விபரீதம்! பள்ளி மாணவரை 30 கி.மீ. காரில் துரத்தி சுட்டுக்கொன்ற கும்பல்

பசு கடத்துவதாக நினைத்து விபரீதம்! பள்ளி மாணவரை 30 கி.மீ. காரில் துரத்தி சுட்டுக்கொன்ற கும்பல்

பரிதாபாத்: ஹரியானா மாநிலம், பரிதாபாதில் 12ம் வகுப்பு மாணவர் பசு கடத்தியதாக தவறுதலாக நினைத்து அவரை 30 கி.மீ., காரில் துரத்தி சென்று ஒரு கும்பல் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு; பசு பாதுகாவலர்கள் அணில் கவுசிக், வருண், கிருஷ்ணா உள்ளிட்ட சிலருக்கு பசுக்கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் படேல் சவுக் அருகில் கண்காணிப்பில் இருந்துள்ளனர். அப்போது ஆர்யன் மிஸ்ரா என்ற 12ம் வகுப்பு மாணவர் நண்பர்கள் சங்கி, ஹர்சித் உள்ளிட்டோருடன் காரில் வந்து கொண்டு இருந்தார். காரை தடுத்து நிறுத்திய பசு பாதுகாவலர்கள் அணில் கவுசிக் உள்ளிட்டோர் யார் என்று அவர்களிடம் விசாரித்துள்ளனர்.ஆயுதங்களுடன் ஒரு கும்பல் தங்களை வழிமறிப்பதைக் கண்ட ஆர்யன் மிஸ்ராவும் அவரது நண்பர்களும் பயந்தனர். நண்பர்களில் ஒருவரான சங்கிக்கு ஏற்கனவே சிலருடன் முன்விரோதம் இருந்ததால், தங்களைத் தான் அவர்கள் கொல்ல வந்திருப்பதாக நினைத்து தப்பிக்க எண்ணி காரில் பறந்துள்ளனர்.பசுக் கடத்தல்காரர்கன் என்பதால் தான் அவர்கள் தப்பிப்பதாக நினைத்த பசு பாதுகாவலர்கள் அணில் கவுசிக் உள்ளிட்டோர் மற்றொரு காரில் அவர்களை விடாது துரத்தி உள்ளனர். இரு குழுவுக்கு இடையே கிட்டத்தட்ட 30 கி.மீ., தூரம் கார் சேசிங் நடந்துள்ளது. பின்னர் கத்புரி அருகே ஆர்யன் காரை வழிமறித்த கும்பல், துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் காரில் இருந்த ஆர்யன் கழுத்தில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.காரின் உள்ளே 2 பெண்கள் இருப்பதை அப்போது தான் கண்ட பசுக்காவலர்கள், பசுக் கடத்தப்படுவதாக தாங்கள் நினைத்து தவறு என்பதை உணர்ந்து உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். தகவலறிந்த போலீசார், தப்பிய அணில் கவுசிக், வருண், கிருஷ்ணா உள்ளிட்ட 5 பேரை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் கைது செய்துள்ளனர். அவர்கள் பயன்படுத்தி துப்பாக்கிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

வைகுண்டேஸ்வரன்
செப் 04, 2024 14:24

நல்லவேளை, சுட்டவர்களும் செத்தவரும் உடன் இருந்தவர்களும் எல்லோரும் இந்துக்கள். வேற மதமா இருந்தால், பிஜேபியினரின் கருத்துக்கள் வேற மாதிரி இருந்திருக்கும்.


வைகுண்டேஸ்வரன்
செப் 04, 2024 14:22

என்ன எழுதினாலும் பயனில்லை. எவ்வளவு பைத்தியக்காரத்தனமானவர்கள் பாருங்கள். காரில் பசுவைக் கடத்த முடியுமா?


தஞ்சை மன்னர்
செப் 03, 2024 13:52

வட மாநில பைத்தியகார பொறம்போக்கு கூட்டம். இவனுங்க தான் தீவிரவாதிகள். இந்த தீவிரவாதிகளை வளர்ந்துவிடும் கூட்டம் தான் வடமாநில பைத்தியங்கள். மத்திய அரசே இதற்கு பொறுப்பு. இதுல வேற இந்தியா வல்லரசு.


RAMAKRISHNAN NATESAN
செப் 03, 2024 13:48

மற்ற எந்த பத்திரிகைகளிலும் ஆர்யன் மிஸ்ராவின் முகம் மறைக்கப்படவில்லை ....


RAMAKRISHNAN NATESAN
செப் 03, 2024 13:35

குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை தேவை .... ஆனா இங்கே சம்பவத்தை எதிர்த்து கருத்து போடுறவன் லாம் யாரு ????


Azar Mufeen
செப் 03, 2024 11:43

கள்ளசராயத்தை எவன் வாயிலாவது கட்டாயப்படுத்தி ஊற்றினார்களா? பசுவை கடத்தினார்கள் என்று 30கி. மீ விரட்டிய கூட்டத்தின் கையில் துப்பாக்கி, இவர்கள் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? நமது தமிழக அதிகாரிகளே 2016இல் மத்திய பிரதேசத்தில் தாக்கப்பட்டார்களே


இறைவி
செப் 03, 2024 11:25

தீயமுகவின் IT Wing கூற்றுப்படியே ஹரியானாவில் இந்த கொலையை நடத்தியது வட மாநில பைத்தியக்கார பொறம்போக்கு தீவிரவாத கூட்டம். இதற்கு மத்திய அரசே பொறுப்பு என்றால் விழுப்புரத்திலும் கள்ளக்குறிச்சியிலும் கள்ளச் சாராய சாவிற்கு பொறுப்பு அதை நிகழ்த்திய அறிவார்ந்த தமிழன் கூட்டமா அல்லது கையாலாகாமல் வேடிக்கை பார்த்த விடியல் அரசு பொறுப்பா? எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் உசுப்பிவிட்ட செண்டிமெண்ட் பைத்தியக்கார கும்பல் உலகில் எந்த மூலையிலும் உண்டு.


venugopal s
செப் 03, 2024 10:50

இதுபோன்ற பைத்தியக்காரத்தனத்துக்கும் முட்டுக் கொடுக்க நமது தமிழக சங்கிகளால் மட்டுமே முடியும்!


S R Rajesh
செப் 03, 2024 10:12

வட மாநில பைத்தியகார பொறம்போக்கு கூட்டம். இவனுங்க தான் தீவிரவாதிகள். இந்த தீவிரவாதிகளை வளர்ந்துவிடும் கூட்டம் தான் வடமாநில பைத்தியங்கள். மத்திய அரசே இதற்கு பொறுப்பு. இதுல வேற இந்தியா வல்லரசு.


ஆரூர் ரங்
செப் 03, 2024 10:07

முன்விரோதக் கொலைக்கு விதவிதமான திராவிஷ விளக்கம். கருமம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை