உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரேவ் பார்ட்டியில் போதையில் ஆட்டம்: 35 பெண்கள் உட்பட 150 பேர் கைது

ரேவ் பார்ட்டியில் போதையில் ஆட்டம்: 35 பெண்கள் உட்பட 150 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: பெங்களூரில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை மீறி, 'ரேவ் பார்ட்டி' நடந்தது. போதையில் ஆட்டம் போட்ட, 35 இளம்பெண்கள் உட்பட 150 பேர் கைது செய்யப்பட்டனர். கர்நாடகா மாநிலம், பெங்களூரில் அதிகாலை, 1:00 மணி வரை பப், சொகுசு விடுதிகளில் பார்ட்டி நடத்த அனுமதி உள்ளது. இந்நேரத்தை மீறி பார்ட்டி நடத்துவோர் மீது, போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பெங்களூரு தெற்கு மாவட்டம், ககலிபுரா அருகே தசாக்சகெரேயில், சுஹாஸ் கவுடா என்பவருக்கு சொந்தமான, 'அயனா' என்ற, 'ஹோம் ஸ்டே'யில் நேற்று முன்தினம் அதிகாலை 2:00 மணி வரை, லேசர் விளக்குகளை ஜொலிக்கவிட்டு, டி.ஜே., இசைக்கு நடனமாடும், 'ரேவ் பார்ட்டி' நடந்தது. தகவலறிந்த ககலிபுரா போலீசார், 'ஹோம் ஸ்டே'க்கு சென்றனர். அங்கு நடனமாடி கொண்டிருந்த 35 இளம்பெண்கள், மூன்று சிறுவர்கள் உட்பட, 150 பேரை கைது செய்தனர். அங்கு போதைப் பொருட்களும் சிக்கின. கைதானவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளனரா என்பதை கண்டறிய, ராம்நகர் அரசு மருத்துவமனைக்கு அனைவரும் அழைத்து செல்லப்பட்டனர். மருத்துவ சோதனைக்கு பின், அனைவரின் முகவரியையும் வாங்கி கொண்டு விடுவிக்கப்பட்டனர். பெங்களூரு தெற்கு எஸ்.பி., சீனிவாஸ் கவுடா கூறியதாவது: கைதானவர்கள் முகவரியை சேகரித்து வைத்துள்ளோம். அனைவரும் பெங்களூரு நகரின் பல பகுதி களை சேர்ந்தவர்கள். எல்லாருக்கும், 19 முதல் 23 வயது இருக்கும். 'ஜெனரல் ஜீ' என்ற பெயரில் உருவாக்கப்பட்ட, 'வாட்ஸாப்' குழுவில், 'ரேவ் பார்ட்டி' குறித்து பதிவிடப்பட்டது. இந்த பதிவை பார்த்து பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். பார்ட்டிக்கு ஏற்பாடு செய்த நான்கு பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது. 'ஹோம் ஸ்டே' சட்டவிரோதமாக நடந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

V. SRINIVASAN
நவ 04, 2025 10:58

பிஜேபி பிள்ளைகளா இருக்க போறங்க அவங்க வந்து ஜாலி யாக இருந்துவிட்டு காங்கிரஸ் மேல் பழி போடுவார்கள்


ஏனோக்
நவ 03, 2025 13:32

எல்லாம் பெரிய வீட்டு பிள்ளைங்க பார்த்து !


சிந்தனை
நவ 03, 2025 11:34

அருமையான சட்டத்துறை இதையெல்லாம் ஒரு மணி வரை செய்தால் தப்பு இல்லை ஒரு மணிக்கு பிறகு செய்தால் தவறு எவ்வளவு அழகான சட்டங்கள் மெடல் கொடுக்க வேண்டும் வம்சத்தை Naasam ஆக்குபவர்களுக்கு


Rathna
நவ 03, 2025 11:13

மர்ம நபர்கள் போதை மருந்து வியாபாரத்தில் நாடு முழுவதும் கொடி கட்டி பறக்கிறார்கள். ஸ்ரீஇலங்கை, மலேஷியா, நைஜீரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து கடத்தி வந்து பல மடங்கு லாபத்தில் இங்கு விற்று இள வயதினரை வாழ்க்கையில் மீள முடியாமல் செய்கிறார்கள்.


தலைவன்
நவ 03, 2025 10:41

எல்லாரும் அங்கேதான் போயிகிட்டு இருக்காங்களா??


duruvasar
நவ 03, 2025 10:08

பெங்களூரில் கடற்கரை வசதி இல்லாதலால் மாட்டிக்கொள்கிறார்கள். போலீசுக்கும் அவ்வளவு வருமானம் கிடைக்காது. இதெல்லாம் எதார்த்தமான காரணிகள்.


RAMAKRISHNAN NATESAN
நவ 03, 2025 08:58

ஆர்கனைஸ் செய்தவர்களின் பெயர்கள் கிடைக்குமா?


VENKATASUBRAMANIAN
நவ 03, 2025 07:47

நல்ல நடவடிக்கை. இங்கே இருந்தால் கமிஷன் கை மாறி இருக்கும்.


கனோஜ் ஆங்ரே
நவ 03, 2025 11:26

அங்க வாரமான இந்த கூத்து நடக்குதுய்யா... கட்டிங் கொடுத்து நடந்துட்டுதான்யா இருக்கு... சிக்குவனவ கட்டிங் கொடுத்திருக்கமாட்டானங்க...?


T.Senthilsigamani
நவ 03, 2025 07:39

இந்திய பெண்கள் அணி , உலக கோப்பையை வெல்லும் என முன்கூட்டியே தெரிந்ததால் அதனை உற்சாகமாக கொண்டாடியதாக போதை பார்ட்டி பெண்கள் வாக்கு மூலம் .இப்படி செய்தி வந்தாலும் ஆச்சரியம் இல்லை .எல்லாம் கலிகாலம் படுத்தும் பாடு .


Krishna
நவ 03, 2025 07:15

Here Police Might Not Got Commissions


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை